Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கொசுக்களை ஒழிக்கும் நொச்சி செடி​கள்:​ மாநகராட்சியை அணுகலாம்

Print PDF

தினமணி           15.10.2013

கொசுக்களை ஒழிக்கும் நொச்சி செடி​கள்:​ மாநகராட்சியை அணுகலாம்

நொச்சி செடி​க​ளைப் பெறு​வ​தற்கு இணை​ய​த​ளம் மூலம் பொது​மக்​கள் விண்​ணப்​பிக்​கும் வச​தியை செயல்​ப​டுத்த சென்னை மாந​க​ராட்சி முடிவு செய்​துள்​ளது.​

​ சென்​னை​யில் கொசுக்​களை கட்​டுப்​ப​டுத்​தும் வகை​யில் நீர்​வ​ழிப்​பா​தை​க​ளின் கரை​க​ளில் நொச்சி செடி​கள் வளர்க்​கப்​ப​டும் என்று மாந​க​ராட்சி நிதி​நிலை அறிக்​கை​யில் தெரி​விக்​கப்​பட்​டி​ருந்​தது.​ ​

​ இது குறித்து மாந​க​ராட்சி அதி​கா​ரி​கள் கூறி​யது:​ சென்​னை​யில் கொசுக்​களை ஒழிக்க நொச்சி செடி​களை வளர்க்க நட​வ​டிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கி​றது.​ இதற்​கான பணி​யாணை வழங்​கப்​பட்​டுள்​ளது.​

​ முதல் கட்​ட​மாக 5 லட்​சம் செடி​கள் நடப்​ப​டும்.​ வரும் டிசம்​பர் மாதத்​துக்​குள் நொச்சி செடி​களை நடும் பணி​கள் தொடங்​கப்​ப​டும்.​

மேலும் பொது​மக்​கள் தங்​கள் வீடு​க​ளில் நொச்சி செடி​களை வளர்க்க நினைத்​தால் மாந​க​ராட்​சியை அணு​க​லாம் என்​றும் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.​

​ இதற்​காக இணை​ய​த​ளம் மூலம் பொது​மக்​கள் விண்​ணப்​பிக்​கும் வச​தி​யைத் தொடங்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.​ இது தொடர்​பான பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.​ விரை​வில் இந்த வசதி தொடங்​கப்​ப​டும் என்று அதி​கா​ரி​கள் தெரி​வித்​த​னர்.​

 

பேரையூர் பகுதியில் டெங்கு முன் தடுப்பு நடவடிக்கை

Print PDF

தினமணி          08.10.2013

பேரையூர் பகுதியில் டெங்கு முன் தடுப்பு நடவடிக்கை

பேரையூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும், டெங்கு தடுப்பு முகாம் நடைபெற்றது.

பேரூராட்சிகளின் இயக்குநர் செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன் ஆகியோர் உத்தரவின்பேரில், மண்டல உதவி இயக்குநர் ராஜேந்திரன் ஆலோசனையின்பேரில், டெங்கு முன் தடுப்பு நடவடிக்கை முகாம் நடைபெற்றது. இதையொட்டி, பேரூராட்சியிலுள்ள 15 வார்டுகளிலும் நடைபெற்ற ஒட்டுமொத்த துப்புரவுப் பணியின்போது, நீர்த் தேக்கத் தொட்டிகளில் அபேட் மருந்து தெளிக்கப்பட்டது. குப்பைகள் அகற்றப்பட்டன. சாலையோரங்களில் குளோரின் பவுடர் தூவப்பட்டது.

பேரையூர் பேரூராட்சித் தலைவர் கே. குருசாமி, செயல் தலைவர் கலைசெல்வி ஆகியோர் முன்னிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

 

2,206 நாய்களுக்குத் தடுப்பு ஊசி

Print PDF

தினமணி           04.10.2013

2,206 நாய்களுக்குத் தடுப்பு ஊசி

புது தில்லி முனிசிபல் கவுன்சிலுக்கு (என்.டி.எம்.சி) உள்பட்ட பகுதிகளில் உள்ள 2,206 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

வெறிநாய்க் கடிக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இத் தடுப்பூசிகள் போடப்பட்டதாக என்.டி.எம்.சி. நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசோக் விஹார் பகுதியில் இதற்காக முகாம் நடத்தப்பட்டதாகவும், அங்கு 253 நாய்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அசோக் விஹார் 1, 2, 3, வாஸிர்பூர் ஜேஜே காலனி, பங்கர் காலனி, பாரத் நகர், மாடல் டவுன், ரோஹிணி, குலாபி பாக், நியூ போலீஸ் லைன்ஸ், பஸ்சிம் விஹார் உள்ளிட்ட இடங்களில் வீடுகளுக்குச் சென்றும் 1,953 நாய்களுக்கு தடுப்பூசி போடபட்டது. ஒரு தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்து என்.டி.எம்.சி. நிர்வாகத்தின் கால்நடை மருத்துவப் பிரிவு இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தது என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Page 34 of 519