Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

நொய்யல் ஆற்றில் கழிவை கொட்டிய வேன் பறிமுதல்

Print PDF

தினமலர் 01.03.2010

நொய்யல் ஆற்றில் கழிவை கொட்டிய வேன் பறிமுதல்

திருப்பூர் : நொய்யல் ஆற்றில், ஓட்டல் மற்றும் இதர கழிவை கொட்டிய வேன் பறிமுதல் செய்யப்பட்டது. "வேன் டிரைவர் மற்றும் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என ஆர்.டி.., அலுவலக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

நொய்யல் ஆற்றில் தொழிற்சாலைக்கழிவுகள் கொட்டப்பட்டு, ஆறு மாசுபடுத்தப்படுகிறது. ஓட்டல், பேக்கரி, இறைச் சிக்கடைகளில் இருந்தும் கழிவுகள் ஆற்றில் கொட் டப்படுகின்றன. இதைத்தடுக்க, மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த மாதம் நொய்யலில் தொழிற்சாலைக் கழிவுகளைக் கொட்ட வந்த டூ-வீலர் மற்றும் மினி ஆட் டோவை, மாநகராட்சி நிர் வாகம் பறிமுதல் செய்தது.

வீரபாண்டி அருகே ஓடையில் கழிவை கொட் டிய மினி ஆட்டோவை, தெற்கு ஆர்.டி.., அலுவலகத்தினர் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், யுனிவர்சல் ரோடு அருகே நேற்று நொய்யலில் ஓட் டல் கழிவை டெம்போ மூலம் கொட்டுவதாக, கலெக்டருக்கு புகார் சென்றது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க ஆர்.டி.., அலுவலகத்தினருக்கு உத்தரவிட்டார். சம்பவ இடத்தில் ஆய்வு செய்த வடக்கு வட்டாரப் போக்குவரத்து இன்ஸ் பெக்டர் உலகநாதன், ஓட்டல் கழிவை கொட்டிக் கொண்டிருந்த டெம்போ வேனை (டி.என்., 39 ஜே 9124) பறிமுதல் செய்தார்.

வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் உலகநாதன் கூறுகையில், ""ஓட்டல் கழிவை நொய்யலில் கொட்டிய 407 ரக வேன் பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவர் மற்றும் வேன் மீது மேல்நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு, விதிமுறை மீறுவோர் தண்டிக்கப்படுவர்,' என்றார்.

Last Updated on Monday, 01 March 2010 06:28
 

கும்பகோணம் நகராட்சியில் யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கும் பணி தொடக்கம்

Print PDF

தினமலர் 01.03.2010

கும்பகோணம் நகராட்சியில் யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கும் பணி தொடக்கம்

கும்பகோணம் : கும்பகோணம் நகராட்சியில் யானைக்கால் நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 3 நாள் இலவச மாத்திரை வழங்கும் பணி தொடங்கியது.

இத்திட்டத்தின் கீழ் யானைக்கால் நோய் கண்டறியப்பட்டுள்ள 13 மாவட் டங்களில் டி..சி மற்றும் அல்பெண்டசோல் மாத்திரைகளை இலவசமாக வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது. அந்த வகையில் நேற்று மாத்திரை வழங்கும் முகாம் தொடங் கியது. நகராட்சி தலைவர் தமிழழகன் மாத்திரைகளை வழங்கி தொடங்கி வைத்தார். இதையடுத்து வீடுவீடாக சென்று 45 வார்டுகளிலும் இன்றும், நாளையும் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் பூங்கொடி கூறியதாவது: நகராட்சி மருத்துவ பணியாளர்கள் வீடுவீடாக சென்று இலவச மாத்திரைகள் வழங்கி கொண்டிருக் கின்றனர். 2 முதல் 5 வயது வரையுள்ளவர் அல்பென் டசோல், டி..சி மாத்திரைகளை தலா ஒன்று வீதம் உட்கொள்ள வேண்டும்.

6 முதல் 14 வயது வரையுள்ளவர்கள் அல்பென்டசோல் ஒன்றும், டி..சி இரண் டும் உட்கொள்ள வேண் டும். 15 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் அல்பென்டசோல் ஒன் றும், டி..சி மூன்றும் உட்கொள்ள வேண்டும். இம்மாத்திரைகளை உணவு சாப்பிட்ட பிறகு ஒரே வேளையில் சாப்பிட வேண்டும். உணவு சாப்பிடாமல் மாத்திரைகளை போட்டு கொள்ள கூடாது.

நீண்டநாள் நோயாளிகள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள், மனநிலை சரியில்லாதோர், கர்ப்பிணி மற்றும் பாலூட் டும் தாய்மார்கள், 2 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட் டவர்கள் இம்மாத்திரைகளை உட்கொள்ள கூடாது என்றார்.

Last Updated on Monday, 01 March 2010 06:26
 

யானைக்கால் நோய் மாத்திரை வழங்கல்

Print PDF

தினமலர் 01.03.2010

யானைக்கால் நோய் மாத்திரை வழங்கல்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் யானைக்கால் நோயை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு பொதுமக்கள் அனைவருக்கும் டி..சி மாத்திரை நேற்று வழங்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் விஜயகுமார் மாத்திரை வழங்கும் முகாமை வீடு வீடாக சென்று துவக்கி வைத்து பேசியதாவது, பெரம்பலூர் மாவட்டத்தில் யானைக்கால் நோய் வராமல் தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் அனைவருக்கும் டி..சி மாத்திரை வழங்கப்படுகிறது. 2 வயது முதல் 5 வயது வரை ஒரு மாத்திரையும், 6வயது முதல் 14 வயது வரை இரண்டு மாத்திரையும், 15 வயது முதல் உள்ளவர்களுக்கு 3 மாத்திரையும் வழங்கப்படுகிறது. இத்துடன் அல்பெண்டாசோல் ஒரு மாத்திரையும் சேர்த்து வழங்கப்படுகிறது. 2 வயதுக்குட்பட்டவர்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும், 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும், நோய் வாய்ப்பட்டவர்களுக்கும் இந்த மாத்திரை வழங்கப்படமாட்டாது.

இந்த மாத்திரையால் உடலிற்கு எந்தவித தீங்கும் இல்லை. மாத்திரை வழங்கும் பணியில் சுகாதாரத்துறை பணியாளர்கள், ஊட்டச்சத்து பணியாளர்கள் மற்றும் தன்னார்வ பணியாளர்கள், மகளிர்சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் என 2 ஆயிரத்து 141 பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் 4 லட்சத்து 55 ஆயிரத்து 827 பேர் மாவட்டத்தில் பயன் பெறுவர்.

விடுபட்டவர்களுக்கு இன் றும்(1ம்தேதி), நாளையும்(2ம் தேதி) சுகாதார பணியாளர்கள் மூலம் மாத்திரைகள் வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் மாத்திரை சாப்பிடுவதால் வரும் 5 ஆண்டுகளுக்குள் யானைக்கால் நோயை முற்றிலும் ஒழித்து விடலாம். எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த மாத்திரையை வாங்கி சாப்பிட்டு யானைக்கால் நோய் வராமல் தடுக்கவேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏ ராஜ்குமார், நகராட்சி தலைவர் ராஜா, டிஆர்ஓ பழனிசாமி, ஆர்டிஓ பாலுசாமி உட்பட வருவாய்துறை அதிகாரிகள் மருத்துவ துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Last Updated on Monday, 01 March 2010 06:10
 


Page 334 of 519