Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை மேம்படுத்த நடவடிக்கை தேவை

Print PDF

தினமலர் 28.06.2010

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை மேம்படுத்த நடவடிக்கை தேவை

சின்னாளபட்டி:சின்னாளபட்டியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை மேம்படுத்தவும், நகரை தூய்மைப்படுத்தவும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்னாளபட்டியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 18 வார்டுகள் உள்ளன. இவற்றில் சமீபத்தில் உருவான விரிவாக்க பகுதிகள் உட்பட பெரும்பாலான பகுதிகளில் சாக்கடை வசதிகள் முறையாக அமைக் கப்படவில்லை. இதனால் நகரின் பல பகுதிகளில் கழிவுநீர் தேங்கியுள்ளது.

குடியிருப்பு பகுதிகளில் குப்பை தொட்டிகள் வைக்கும் முறை கைவிடப்பட்டு பல ஆண்டுகளாகிறது.இதற்க பதிலாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடுதோறும் சென்று வண்டிகளில் குப்பை சேகரிக்கும் முறை அமலில் உள்ளது. ஆயினும் இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள் குறிப்பிட்ட சில தெருக்களின் ஓரத்தில் கொட்டப்படுகிறது. குப்பை அள்ளும் டிராக்டர் வந்து இவற்றை அள்ளி செல்லும் வரை காற்றில் பறந்து மீண்டும் தெருக்களில் இறைந்து கிடக்கின்றன.

தற்போது துப்புரவு பணியாளர் எண்ணிக்கை பற்றாக்குறையால், நகரின் குறிப்பிட்ட முக்கிய வீதிகளில் மட்டும் அன்றாடம் துப்புர பணிகள் நடக்கின் றன. இதர தெருக்களில் சுழற்சிமுறையில் பல நாட்களுக்கு ஒருமுறைதான் குப்பைகள் அள்ளப்படுகின்றன. கழிவுநீர் சாக்கடைகள் மாதக்கணக்கில் அள்ளப்படாமல் தேங்கியுள்ளன. இவற்றில் இருந்து கிளம் பும் துர்நாற்றம் மற்றும் நோய் கிருமிகளால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளா கியுள்ளனர். திடக்கழிவு மேலாண் மை திட்டத்தை மேம்படுத்தவும், நகரை தூய்மைபடுத்தவும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.