Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குளித்தலை நகராட்சி உரக்கிடங்கில் கர்நாடகா குழுவினர் ஆய்வு மண்புழு உரம் தயாரிப்பது குறித்து கேட்டறிந்தனர்

Print PDF

தினகரன்   20.07.2010

குளித்தலை நகராட்சி உரக்கிடங்கில் கர்நாடகா குழுவினர் ஆய்வு மண்புழு உரம் தயாரிப்பது குறித்து கேட்டறிந்தனர்

குளித்தலை, ஜூலை 20: குளித்தலை நகராட்சி உரக்கிடங்கில் செயல்படுத்தப்படும் மண்புழு உரம் தயா ரிப்பு பணியினை கர்நாடக மாநில குழுவினர் ஆய்வு செய்தனர்.

குளித்தலை நகராட்சி யில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மூலம் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் நாளொன்றுக்கு 8 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த பணியில் 26 பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து மக்கும் குப்பைகளை வை.புதூரில் உள்ள நகராட்சிக்கு சொந் தமான ரூ.40 லட்சத்தில் கட்டப்பட்ட உரக்கிடங்கிற்கு கொண்டு சென்று மண் புழு உரம் தயாரித்து வருகின்றனர். இதுவரை நக ராட்சி சார்பில் ரூ.60,000 மதிப்பில் மண்புழு உரம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

திடக்கழிவு மேம்பாட்டு திட்டம் மூலம் நடைபெறும் இந்த பணிகளை பார்வை யிட கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 21 பேர் கொண்ட குழுவினர் ஒருங்கிணைப்பாளர் சுவப்னா தலைமை யில் நேற்று முன்தினம் குளித்தலை வந்தனர். இந்த குழுவில் கர்நாடக மாநிலத்தில் உள்ள நகராட்சி ஆணையர்கள், நகர்மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள், சுகாதார அலுவலர் கள், ஆய்வாளர்கள், நகரா ட்சி பொறியாளர்கள் ஆகி யோர் வந்திருந்தனர். இவர் களை நகர்மன்ற தலைவர் அமுதவேல், ஆணையர் (பொ) தனலட்சுமி, சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் குளித்தலை அருகே வை.புதூரில் உள்ள உரக்கிடங்கினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுகுறித்து குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுவப்னா கூறுகையில், தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. நாங்கள், இதுவரை நாமக்கல், திருச்சி, முசிறி போன்ற இடங்களில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தை ஆய்வு செய்தோம்.

இதில் மண்புழு உரம் தயாரிப்பது எங்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இயற்கை உரமான இந்த மண்புழு உரத்தை தயாரிப்பது குறித்து இங்குள்ளவர்களிடம் கேட்டறிந்தோம். இதே திட்டத்தை கர்நாடகாவில் முதலில் 2 நகராட்சிகளை தேர்வு செய்து அவற்றில் செயல்படுத்த உள்ளோம் என்றார்.