Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நரேலா&பாவனா பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சுற்றுச்சூழல் துறை அனுமதி

Print PDF

தினகரன் 09.08.2010

நரேலா&பாவனா பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சுற்றுச்சூழல் துறை அனுமதி

புதுடெல்லி, ஆக. 9: டெல்லியில் ஒரு நாளைக்கு 6 ஆயி ரம் டன் முதல் 7 ஆயிரம் டன் வரை குப்பைகள் சேருகின்றன. அவை காஜிப்பூர், பலஸ்வா&ஜகாங்கீர்புரி, ஓக்லா ஆகிய இடங்களில் கொட்டப்படுகின்றன. 3 குப்பை கிடங்குகளும் நிரம்பி வழிவதால், குப்பைப்பிரச்னை மாநகராட்சிக்கு பெரும் பிரச்னையாக உள்ளது.

இந்நிலையில், ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலா ண்மைத் திட்டத்தை வடமேற்கு டெல்லியின் நரேலா& பாவனா பகுதியில் செயல்படுத்த மாநகராட்சி முடிவு செய்தது. ரூ70 கோடி செலவிலான இந்தத் திட்டம் 100 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்தப்படவுள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்த ராம்கி என்விரோ இன்ஜினியரிங் நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. திட்டப்பகுதியின் அருகில் இந்திய விமானப்படை தளம் அமைந்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். குப்பைகளைத் தேடி வரும் பறவைகள், விமானங்கள் மீது மோத வாய்ப்பு உள்ளது என்று விமானப்படை அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் இத்திட்டத்தை நிறைவேற்ற மாநகராட்சிக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. ‘ஆபத்து ஏற்படுத்தும் கழிவுகள்&2008 விதிகளுக்கு உட்பட்டு திட்டத்தை செயல்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டுமெனவும், நிலத்தடி நீர்மட்டத்தின் அளவைக் கொண்டு, குப்பைகள் கொட்டும் இடத்தின் ஆழத்தை இறுதி செய்ய வேண்டுமெனவும் மாநகராட்சிக்கு சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தியுள்ளது.