Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சி குப்பை உரக்கிடங்கிற்கு தண்ணீர் விநியோகம் உரம் தயாரிக்கும் பணி விரைவில் துவங்கும் ரூ16 லட்சத்தில் திட்ட மதிப்பீடு

Print PDF

தினகரன் 27.09.2010

நகராட்சி குப்பை உரக்கிடங்கிற்கு தண்ணீர் விநியோகம் உரம் தயாரிக்கும் பணி விரைவில் துவங்கும் ரூ16 லட்சத்தில் திட்ட மதிப்பீடு

கரூர், ஏப்.27: கரூர் நகராட்சியில் குப்பையில் உரம் தயாரிக்கும் உரக்கிடங்கிற்கு தண்ணீர் விநியோகிக்க ரூ.16 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

கரூர் நகராட்சியின் மக்கள் தொகை சுமார் 70,000. தொழில் நகரமாக விளங்குவதால் நாள்தோறும் நகருக்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வந்துசெல்கிறார்கள். நகராட்சியில் உள்ள 36வார்டுகளில் நாள் தோறும் சேரும் 45 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகள் லாரிகள் மூலம் வாங்கல் சாலையில் உள்ள நகராட்சிக்கு சொந்த மான குப்பை கிடங்கில் போடப்பட்டு வந்தன. அவ்வப்போது இவை தீவைத்து எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்பட்டது.

இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், நகராட்சிக்கு வருமானம் கிடைக்கும் வகையிலும் தமிழக அரசு குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டத்தை கொண்டு வந் தது. இதில் கரூர் நகராட்சி தேர்வு செய்யப்பட்டது.

திடக்கழிவு மேலாண் மைத் திட்டத்தில், இதன்படி கலவை உரக்கிடங்கு ரூ90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி உரம் தயாரிக்கும் கூடம் அமைக்கப்பட்டு அதில் குப்பைகள் கொட்டப்பட்டன. மக்கும் குப்பைகள் குழிகளில் கொட்டி சாணநீர் தெளிக்கப்பட்டு கிளறி விடப்படும். 75நாள் முதல் 90 நாட்களில் உரம் தயாராகிவிடும்.

உரம் தயாரிக்க ஏதுவாக வின்ட்ரோஸ் அமைக்கப்பட்டுள்ளது. கலவை உரம் தயாரிக்க தண்ணீர் அவசி யம் தேவைப்படுகிறது. இப்பணிக்கு தேவையான தண்ணீரை பாதாள சாக் கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரித்த தண்ணீரை அந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கலவை உரக்கிடங்கிற்கு குழாய்கள் மூலம் கொண்டுவந்து 6,000 லிட்டர் கொள் ளவு கொண்ட இருமேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் சேமித்து வைத்து கலவை உரக்கிடங்கிற்குள் பகிர்மான குழாய்கள் மூலம் விநியோகம் செய்ய கரூர்நகராட்சி நிர்வாகம் ரூ16லட்சம்மதிப்பில் திட்டம் தயாரித்துள்ளது.இப்பணிகள் நிறைவுபெற்றதும் உரம் தயாரிக்கும் பணி துவங்கும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.