Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உரம் தயாரிக்க தண்ணீர் விநியோகம்: ரூ.18 லட்சத்தில் கரூர் நகராட்சி திட்டம் தயாரிப்பு

Print PDF

தினமலர் 28.09.2010

உரம் தயாரிக்க தண்ணீர் விநியோகம்: ரூ.18 லட்சத்தில் கரூர் நகராட்சி திட்டம் தயாரிப்பு

கரூர்: கரூர் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், உரம் தயாரிக்க தேவையான தண்ணீரை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம், விநியோகம் செய்வதுக்கு 16 லட்சம் ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிப்போர் மற்றும் பல்வேறு நிமித்தமாக வந்து செல்வோர் என நாள்தோறும் லட்சக்கணக்கானோர் புழக்கம் உள்ளது. இதனால், 45 டன்னுக்கும் அதிகமாக குப்பை சேர்கிறது. குப்பைகள் லாரிகள் மூலம் வாங்கல் சாலையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு, அவ்வப்போது தீவைத்து எரிக்கப்படுகிறது. இதன்மூலம் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வந்தது. இதை தவிர்க்கும் வகையில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் உரம் தயாரிக்கும் திட்டத்துக்கு நகராட்சி நிர்வாகம் இடம் தேர்வு செய்தது. கலவை உரக்கிடங்கு 90 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டது. உரம் த யாரிக்கும் கூடம் அமைக்கப்பட் டு அதில் அப்பைகள் கொட்டப்பட்டன.

மக்கும் குப்பைகள் குழிகளில் கொட்டி சாணநீர் தெளிக்கப்பட்டு கிளறிவிடப்படும். கலவை உரம் தயாரிக்க தண்ணீர் அவசியம் தேவைப்படுகிறது. இப்பணிக்கு தேவையான தண்ணீரை பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் மூலம், சுத்தகரித்த தண்ணீரை குழாய் மூலம் கொண்டு எடுத்து வந்து ஆறாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் சேமித்து வைக்கப்படவுள்ளது. இங்கியிருந்து கலவை உரக்கிடங்கிற்குள் பகிர்மான குழாய் மூலம் விநியோகம் செய்ய கரூர் நகராட்சி நிர்வாகம் 16 லட்சம் ரூபாய் மதிப்பில் திட்டம் தயாரித்துள்ளது. விரைவில் இப்பணி நிறைவடைந்து உரம் தயாரிப்பு பணி துவங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. கி.புரம் டவுன் பஞ்., கூட்டம் லாலாப்பேட்டை: கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து சாதாரண கூட்டம் தலைவர் தனலட்சுமி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் மதியழகன் முன்னிலை வகித்தார். பஞ்சாயத்து வார்டு பகுதியில் உள்ள சாலை பராமரிப்பு மற்றும் குடிநீர் வசதி, சுகாதாரம், தெருவிளக்கு பராமரிப்பு குறித்து கவுன்சிலர்கள் பேசினர். கவுன்சிலர்கள் இளங்கோவன், தர்மர், அம்பிகாவதி, கலையரசி உட்பட பலர் பங்கேற்றனர்.