Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாடித்தோட்டத்திற்கு இலவசமாக குப்பை உரம்

Print PDF

தினகரன் 30.09.2010

மாடித்தோட்டத்திற்கு இலவசமாக குப்பை உரம்

நாகர்கோவில், செப். 30: மாடித்தோட்டம் திட்டத்திற்கு மக்கும் குப்பைகளை பேக்கிங் செய்து இலவசமாக வழங்க உள்ளதாக நகராட்சி தலைவர் அசோகன் சால மன் தெரிவித்தார்.

குமரியில் பூஜ்ய கழிவு மேலாண்மை திட்டம் வரு கிற ஜனவரி முதல் செயல் படுத்தப்பட உள்ளது. அதற் காக கலெக்டர் ராஜேந்திர ரத்னூ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இத்திட்டத்தின் ஒரு பகுதி யாக மக்கும் குப்பைகளை பயன்படுத்தி வீட்டு மொட்டை மாடிகளில் காய் கறி தோட்டம் அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள் ளது. இதற்காக உள்ளாட்சி அமைப்புகள் தோட்டக்கலைத்துறையுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டிடங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தோட்டம் அமைக்க தோட்டக்கலைத் துறையினர் ஆலோசனை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் நகராட்சி சார்பில் இத்திட்டத்திற்கு முன்மாதிரியாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. அதன் படி ஆர்வமுள்ள கவுன்சிலர்களின் வார்டுகளில் இத்திட்டத்தை செயல்படுத்த சேர்மன் அசோகன்சாலமன், ஆணை யர் ஜானகி ரவீந்திரன் ஆகி யோர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். நாகர்கோவில் நகராட்சியில் 14வது வார்டில் முதல் கட்ட மாக 10 வீடு களில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

இந்நிலையில் இத்திட்டத்திற்காக வலம்புரிவிளை உரக்கிடங்கிலிருந்து இலவசமாக மக்கும் குப்பைகளை பேக்கிங் செய்து வழங்க நகராட்சி முடிவு செய்துள் ளது. இதுகுறித்து சேர்மன் அசோகன் சாலமன் கூறியதாவது: குமரியில் பிளாஸ்டிக் தடை, நீர் நிலை சுகாதார மேலாண்மை போன்ற மாவட்ட நிர்வாகத்தின் நல்ல திட்டங்களுக்கு நாகர்கோவில் நகராட்சி முழுமை யான ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. தற்போது பூஜ்யகழிவு மேலாண்மைக்காக மாடித்தோட்டம் திட்டம் அறிமுகம் செய்யப் பட்டுள் ளது. பொதுமக்களின் ஆர் வத்தை தூண்டும் வகையில் அதற்கு இலவசமாக மக்கும் குப்பை உரங்களை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. நகர் மன்ற ஒப்புதல் பெற்று வலம்புரிவிளை உரக்கிடங்கில் மக்கும் குப்பைகள் நன்றாக தரம்பிரிக்கப் பட்டு பேக்கிங் செய்து வீடுகளுக்கு இலவசமாக வழங்கப்படும். என்றார்.

அசோகன் சாலமன் தகவல் தோட்டக்கலைத்துறையில் அதிக விசாரிப்பு

மாடித்தோட்டம் அமைப்பது குறித்து தோட்டக்கலைத்துறை அலுவலகத்திற்கு முதல் நாளே 100க்கும் மேற்பட்டோர் தொலைபேசி மூலம் ஆலோசனை கேட்டுள்ளனர். அவர்களுக்கு தொலைபேசி மூலம் மட்டுமின்றி நேரிலும் ஆலோசனைகள் வழங்கி வருவதாக தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் கண்ணன் தெரிவித்துள்ளார்.