Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குப்பை கழிவு உரம் தயாரிப்பு மண்டல கண்காணிப்பு கமிஷனர் ஆய்வு

Print PDF

தினமலர்                    03.11.2010

குப்பை கழிவு உரம் தயாரிப்பு மண்டல கண்காணிப்பு கமிஷனர் ஆய்வு

கரூர்: குளித்தலை நகராட்சியில் குப்பை கழிவில் இருந்து உரம் தயாரிக்கும் முறையை மண்டல கண்காணிப்பு கமிஷனர் மற்றும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு மேலாண்மை இயக்குனர் புரில் நேரில் ஆய்வு செய்தார். குப்பை கழிவுகளை சேகரித்து மக்கவைத்து, அதிலிருந்து மண்புழு உரம் தயாரிக்கும் முறை, குப்பையை மக்களிடம் பெற்று, உரிய முறையில் மக்கவைத்து உரம் தயாரிக்கும் பணி நடைபெறுவதாகவும், நகராட்சி தலைவர் அமுதவேல் விளக்கினார். நகராட்சிகளுக்கு முன்மாதிரியாக விளங்கும் இத்திட்டத்தை கண்காணிப்பு கமிஷனர் புரில் பாராட்டினார்.

சிந்தலவாடி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் கொசூர் மற்றும் ஐந்து பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட 72 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம், பிள்ளப்பாளையம் மற்றும் 6 பஞ்சாயத்துக்கு உட்பட்ட 53 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர்த் திட்டப்பணி செயலாகம், குமாரமங்கலத்தில் "ராஜராஜன் 1000' செம்மை நெல் சாகுபடி குறித்தும் பார்வையிட்டார். கரூர் கலெக்டர் உமாமகேஸ்வரி, குளித்தலை நகராட்சி கமிஷனர் தனலட்சுமி, குளித்தலை ஆர்.டி.., பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Last Updated on Thursday, 04 November 2010 04:15