Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குழித்துறை நகராட்சியில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பு

Print PDF

தினகரன்                  15.11.2010

குழித்துறை நகராட்சியில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பு

மார்த்தாண்டம் நவ.15: குழித் துறை நகராட்சி உரக்கிடங்கு மார்த்தாண்டம் கீழ்பம்மம் பகுதியில் உள்ளது. இங்கு ஒவ்வொரு நாளும் நகரில் சேரும் 3 லாரி குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. இதனால் உரக்கிடங்கில் மலைபோல் குப்பைகள் குவிந்து காணப் படுகின்றன.

இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், கடுமையான துர்நாற்றமும் வீசுகிறது. மேலும் அப்பகுதியில் பல் வேறு தொற்று நோய்களும் ஏற்பட்டு வருகின்றன. இந்த குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்த னர். இதை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன.

இதையடுத்து நகராட்சி சார்பில் உரக்கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற முயற்சி கள் செய்யப்பட்டன. எனினும் இதில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. தற் போது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் இந்த குப்பை களை தரம் பிரித்து உரம் மற்றும் மின் சாரம் தயாரிக்க நகராட்சி முடிவு செய்துள் ளது. அதன்படி தனியார் நிறுவனத்தின் உதவியோடு குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதலில் இங்கு கொட்டப்படும் குப்பைகள் உலோகபொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், மக்கும் குப்பை கள் என 3 ஆக தரம் பிரிக்கப்படுகின்றன. பின்னர் மக்கும் குப்பைகளுடன் சாணம், ஈயம் கலந்து ஏரோமிக் முறையில் காற்றின் உதவியுடன் கழிவு களை உரமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதோ போல் உலோகம் மற்றும் மக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் மறு சுழற்சிக்கு அனுப்பிவைக் கப்பட உள் ளன. மக்காத பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் சிமென்ட் ஆலைகளுக்கு ஊடுபொருளாக அனுப்பப்பட உள்ளன.

கோழி போன்ற இறைச்சி கழிவுகளை வேதியியல் முறையை பயன்படுத்தி அவற்றில் இருந்து மின் சாரம் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 750 கிலோ கழிவுகளில் இருந்து சுமார் 12 ஆயிரம் மதிப்புள்ள மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளது. இந¢த திட்டம் படிப்படியாக நிறைவேற்றப்பட உள்ளது.

இதில் முதற்கட்டமாக தற்போது மக்கும் குப்பை களை உரமாக மாற்றுவதற் காக மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகள் ஜேசிபி இயந்திரம் மூலம் சமப் படுத்தி அவற்றின் மீது மண் நிரப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் இப் பணிகளை நகராட்சி தலை வர் பொன். ஆசைத்தம்பி, மின்சாரம் தயாரிக்கும் தனியார் நிறு வன இயக்குனர் சந்திரகுமார், கவுன்சிலர் ரத்தின மணி, நக ராட்சி சுகாதார அலுவலர் கிறிஸ்துதாஸ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். குமரியில் உள்ள 4 நக ராட்சி பகுதிகளிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது முதன்முத லாக குழித்துறை நகராட்சி யில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

குழித்துறை நகராட்சி பகுதியில் சேரும் குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்க நகராட்சி முடிவு செய்துள்ளது. இதன் முதல்கட்டமாக மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுவதற்காக அங்கு குவிந்துள்ள குப்பைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் சமன் செய்யும் பணி நடந்தது.