Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

எட்டயபுரம் டவுன் பஞ்.,ல் திடக்கழிவு மேலாண்மை திட்டம்

Print PDF

தினமலர்             03.12.2010

எட்டயபுரம் டவுன் பஞ்.,ல் திடக்கழிவு மேலாண்மை திட்டம்

எட்டயபுரம்:எட்டயபுரம் டவுன் பஞ்., பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திணை செயல்படுத்தும் முறை பற்றிய கருத்தரங்கம் நடந்தது. எட்டயபுரம் டவுன் பஞ்.,ல் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் எக்ஸ்னோரா கிரீன் பம்மல் சென்னை என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் எட்டயபுரம் டவுன் பஞ்.,ஐ குப்பையில்லா நகரமாக மாற்றிடவும், தொடர்ந்து நகரினை தூய்மையாகவும், அழகாகவும் பராமரித்திடவும் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. எட்டயபுரம் டவுன் பஞ்., துணைத்தலைவர் கோவிந்தராஜ பெருமாள் தலைமை வகித்தார். டவுன் பஞ்., நிர்வாக அதிகாரி உமர்முகைதீன், தொண்டு நிறுவனம் புராஜக்ட் மேனேஜர் நரசிம்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மட்கும் குப்பை உரம் தயாரிக்கவும், மக்காத குப்பை ரீவைண்டிங் செய்தும் பயன்படுத்தப்படுகிறது. தென் மாவட்டத்தில் திருச்செந்தூரில் ஆரம்பமானது. எட்டயபுரத்தில் இனிமேல் ஆரம்பிக்க கூட்டம் நடந்தது. எட்டயபுரத்தில் 19 சுகாதாரப் பணியாளர்களில் சிலர் மட்டும் சுகாதாரப் பணி செய்வதால் நகரில் சுகாதார கேடு ஏற்பட்டு நகரம் சாக்கடை நகரமாகிறது. மீதி சுகாதார பணியாளர்களை மாற்று பணிக்கு பயன்படுத்துவதால் சுகாதாரப்பணிகள் தொய்வடைகிறது என குரல் கொடுக்கப்பட்டது. இந்த திட்டம் அமுலுக்கு வந்தால் 60 பேருக்கு வேலை கிடைக்கும். எட்டயபுரத்தில் 7 டன் குப்பை ஒருநாளில் சேர்கிறது என விவாதிக்கப்பட்டு, திட்டம் பற்றி எந்த நடவடிக்கை எடுப்பது என முடிவு பெறாமல் கூட்டம் முடிந்தது. வர்த்தகர் சங்க செயலாளர் அய்யனார், பா.., மாவட்ட செயற்குழு முத்துவேல், காங்., நகர தலைவர் குணசேகரன், திமுக., நகர செயலாளர் பாரதிகணேசன், சிபிஎம் தாலுகா செயலாளர் ரவீந்திரன், சிபிஐ., நகர செயலாளர் குமரன், ஓய்வுபெற்ற அலுவலர் சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், கவுன்சிலர்கள் பேச்சியப்பன், காளிமுத்து, சங்கரநாராயணன், ராமசாமி, கார்த்திகை தேவி, நாராயணவடிவு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.