Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

66 குப்பை சேகரிப்பு மையங்கள் விரைவில் செயல்படத் தொடங்கும்: பெங்களூர் மாநகராட்சி ஆணையர்

Print PDF

தினமணி           04.09.2012

 66 குப்பை சேகரிப்பு மையங்கள் விரைவில் செயல்படத் தொடங்கும்: பெங்களூர் மாநகராட்சி ஆணையர்

பெங்களூர், செப்.3: பெங்களூரில் இயங்கிவந்த 66 குப்பை சேகரிப்பு மையங்கள் வெகுவிரைவில் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று, பெங்களூர் மாநகராட்சி ஆணையர் ரஜனீஷ்கோயல் தெரிவித்தார்.

பெங்களூர், யலஹங்கா, பேட்ராயனபுரா சட்டப்பேரவைத் தொகுதிகளை ஆய்வு செய்த பெங்களூர் மாநகராட்சி ஆணையர் ரஜனீஷ்கோயல், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

பெங்களூரில் இயங்கிவந்த 66 குப்பை சேகரிப்பு மையங்களின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை அளிக்கும்படி 8 மண்டலங்களின் துணை ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். யலஹங்கா குப்பை சேகரிப்பு மையம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இது அதிருப்தி அளிக்கிறது.

இயங்காமல் உள்ள இந்த மையத்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு தேவையான நிதி ஒதுக்கப்படும். வீடுகளிலேயே குப்பையை வகைப் பிரிக்கும் வழக்கத்தை எல்லா வார்டுகளிலும் கட்டாயமாக்குவோம்.

அடுக்குமாடி கட்டடங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை உரம் அல்லது மின்சாரம் தயாரிக்க, அங்கேயே வசதி செய்து கொள்ள வேண்டும். இதுகுறித்து அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர்களை சந்தித்துப் பேசுவேன் என்றார்.