Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுகாதாரப் பணிக்கு புதிய வாகனங்கள்

Print PDF
தினமணி          09.03.2013

சுகாதாரப் பணிக்கு புதிய வாகனங்கள்


சேலம் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகளுக்காக, ரூ.54 லட்சத்தில் வாங்கப்பட்ட புதிய வாகனங்கள் வெள்ளிக்கிழமை பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டன.

சேலம் மாநகராட்சியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ், திடக் கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகளுக்காக 24 வாகனங்கள் வாங்க ரூ.5.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்படி, முதல் கட்டமாக ரூ.54 லட்சத்தில் இரண்டு எக்ஸ்வேட்டர் வாகனங்கள் வாங்கப்பட்டன.

அந்த வாகனங்களை பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாநகராட்சி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு வாகனங்களின் சாவியை ஓட்டுநர்களிடம் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 65 சுய உதவிக் குழுவினருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.6.50 லட்சத்தையும், ஆனந்தா பாலம், குண்டுபோடும் தெரு பாலம் ஆகியவற்றுக்கு நிலம் வழங்கிய 4 நபர்களுக்கு இழப்பீடு தொகையாக மொத்தம் ரூ.73.24 லட்சத்தையும் அமைச்சர் வழங்கினார்.

மாநகர மேயர் எஸ்.செüண்டப்பன், ஆணையர் எம்.அசோகன், துணை மேயர் எம்.நடேசன், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. எம்.கே.செல்வராஜ் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.