Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி குப்பை கிடங்கில் உரம் உற்பத்தி துவங்கியது

Print PDF

தினகரன்               02.04.2013

மாநகராட்சி குப்பை கிடங்கில் உரம் உற்பத்தி துவங்கியது


மதுரை: மதுரை நகரில் அன்றாடம் சேரும் குப்பை அவனியாபுரம் வெள்ளக்கல்லிலுள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் குவிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக புகார் எழுந்தது. இதை தடுக்க நேரு நகர்ப்புற மேம்பாட்டு திட் டம் மூலம் மாநகராட்சி குப் பை கிடங்கு ரூ.57 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக்கப்பட்டு, குப்பையில் இரு ந்து உரம் தயாரிப்பு நிலையம் தனியார் பங்களிப்புடன் நிறுவப்பட்டுள்ளது.

மாநகராட்சி 100 வார்டுகளிலும் தினமும் 600 டன் குப்பை சேருகிறது. இந்த குப்பைகள் 140 மாநகராட்சி வாகனம் மற்றும் 77 ஒப்பந்த வாகனங்கள் மூலம் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதில் மக்காத குப்பை கழிவுகள் பிரிக்கப் பட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல், பூமிக்குள் புதைக்கப்படுகின்றன. மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கப்படுகிறது.

தினமும் 100 டன் உரம் உற்பத்தியாகிறது. கடந்த 3 மாதங்களாக உர உற்பத்தி சோதனை ஓட்ட நிலையில் இருந்தது. நேற்று உரம் உற்பத்தி துவங்கியது. மாநகராட்சி ஆணையர் நந்தகோபால் தலைமையில் மேயர் ராஜன்செல்லப்பா துவக்கி வைத்தார்.

இதுபற்றி மேயர் கூறுகை யில், மாநகராட்சி குப்பை கிடங்கு நவீனமயமாக்கப்பட்டு குப்பையில் இருந்து உரம் தயாரிப்பு தொடங்கி விட்டதால், இனிமேல் குப்பை கிடங்கில் இருந்து புகை வெளியேறுவது தடுக்கப்படும். சுற்றுச் சூழல் மாசுபடாமல் தடுக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் நகர பொறியாளர் மதுரம், செயற்பொறியாளர் ராஜேந்திரன், திடக்கழிவு மேலாண்மை திட்ட தலைவர் பங்கஜ்ஜெயின், உதவி பொறியாளர் சேவியர் பங்கேற்றனர்.