Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க... திட்டம் கோபி நகராட்சிக்கு ரூ.35 லட்சம் மானியம்

Print PDF
தினமலர்          30.04.2013

குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க... திட்டம் கோபி நகராட்சிக்கு ரூ.35 லட்சம் மானியம்

கோபிசெட்டிபாளையம்: கோபி நகராட்சியில் மக்கும் குப்பைகள், அழுகிய காய்கறிகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக பயன்படுத்தாத நிலையில், மாதம் ஆறு லட்சம் டன் குப்பை கழிவுகள் எவ்வித மறு சுழற்சியும் செய்யப்படாமல், வீணாகும் நிலை ஏற்பட்டது.

கிராமப்புற பஞ்சாயத்துகளில் தினமும் வெளியாகும் குப்பையில், மக்கும் குப்பை, மக்காத குப்பை என இரண்டு வகையாக தரம் பிரிக்கப்பட்டு, உரக்குழிகள் மூலம், உரங்களாக தயாரிக்கப்பட வேண்டும், என பஞ்சாயத்துகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தமிழகத்தில் உள்ள நகராட்சிகளில் செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. தினசரி சேகரமாகும் குப்பை கழிவுகளில் இருந்து, மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தமிழகத்தில் கோபி நகராட்சி உள்பட, 27 நகராட்சிகள் செயல்படுத்தப்படும், என அரசு அறிவித்துள்ளது.கோபி நகராட்சியில் உள்ள, 27 வார்டுகளில் மட்டும் தினமும், மூன்றரை டன் மக்கும் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதுவரை நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வீணாகியது. மக்கும் குப்பை கழிவுகளில் இருந்து கோபி நகராட்சி குப்பை கிடங்கில் மின்சாரம் தயாரிக்கும் பிளாண்ட் அமைக்கப்பட உள்ளன.

இத்திட்டத்தை செயல்படுத்த ஐந்து சென்ட் நிலம் போதுமானது. திட்டத்தின் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம், நகராட்சி பகுதியில் உள்ள தெருவிளக்குகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.இத்திட்டத்தை செயல்படுத்த, கோபி நகராட்சிக்கு, 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நகராட்சி பங்களிப்பு ஐந்து லட்சம் ரூபாய், அரசின் மானியம், 35 லட்சம் என இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.குப்பைகள் அதிகரிக்கும் நிலையில், நகராட்சிக்கான மானிய தொகை வேறுபடும்.

நகராட்சி பகுதிகளில் தேங்கும் குப்பை, காய்கறி, இறைச்சி கழிவுகள், ஓட்டல் மூலம் கொட்டப்படும் கழிவுகள் அப்புறப்படுத்தாமல், சாலை ஓரங்களில் தேங்கி கிடப்பதால், சுகாதாரக்கேடு ஏற்பட வழி வகுத்தது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தப்படுவதன், மூலம் இக்குப்பை கழிவுகள் தேங்காமல் சுற்று சூழல் பேணி காக்க முடியும்.மின் உற்பத்தி மற்றும் பயன்பாடு மூலம், நகராட்சிக்கும் வருவாய் உயர்ந்து, செலவு குறையும். குப்பையும் தேவையின்றி தேங்குவது தவிர்க்கப்படும்.