Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெ.நா.பாளையம் பேரூராட்சி மக்கள் இயற்கை உரம் தயாரிக்க ஊக்குவிப்பு

Print PDF

தினமணி                28.06.2013 

பெ.நா.பாளையம் பேரூராட்சி மக்கள் இயற்கை உரம் தயாரிக்க ஊக்குவிப்பு

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களே தங்களது வீடுகளில் இயற்கை உரம் தயாரிப்பதை ஊக்குவிக்கும் வகையில்,  தன்னார்வலர்களுக்கு "ஹேண்ட் இன் ஹெண்ட்' என்ற அமைப்பின் மூலமாக இயற்கை உர மண்பானைகளை இலவசமாக வழங்கியுள்ளது.

 இந்த அமைப்பு, மட்கும் மற்றும் மட்காத பொருள்களைப் பிரித்து அக் கழிவிலிருந்து பயனுள்ள பொருள்களைத் தயாரிக்கும் திட்டத்தை இப் பேரூராட்சியில் செயல்படுத்துகிறது. கடந்த ஆண்டு வீடுகளுக்கே நேரடியாகச் சென்று குப்பையைப் பெறும் திட்டத்தை செயல்படுத்தியது. இப்போது, பொதுமக்களே தங்களது வீடுகளில் உருவாகும் காய்கறிக் கழிவைக் கொண்டு இயற்கை உரம் தயாரிக்கும் வகையில் 3 மண்பானை உபகரணங்களை இலவசமாக வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக 45 நாள்களில் சிறந்த இயற்கை உரத்தை தயாரித்துப் பயன்படுத்த இயலும்.

 இத் திட்ட தன்னார்வப் பயனாளிகளுக்கு இந்த உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. செயல் அலுவலர் துவாரகநாத் சிங் முன்னிலை வகித்தார். பேரூராட்சித் தலைவர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமை வகித்து உபகரணங்களை வழங்கினார்.

 துணைத் தலைவர் சந்திரன், கவுன்சிலர்கள் குணசேகரன், சுப்பிரமணியன், திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் விமல்குமார், மேற்பார்வையாளர் சுரேஷ், குப்புராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.