Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திடக்கழிவு மேலாண்மை திட்டம்: இயந்திரம் பயன்படுத்த பேரூராட்சி முடிவு

Print PDF

தினமலர் 02.02.2010

திடக்கழிவு மேலாண்மை திட்டம்: இயந்திரம் பயன்படுத்த பேரூராட்சி முடிவு

சோழிங்கநல்லூர்: சோழிங்கநல்லூர் பேரூராட்சியில் மாவட்டத் திலேயே முதல் முறையாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பை சேகரிக்கும் பணியில் இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளது.

சோழிங்கநல்லூர் பேரூராட்சி 15 வார்டுகளையும், 30 ஆயிரம் மக்கள் தொகையையும் கொண்டது. தினசரி 10 டன் குப்பைகள் சேகரமாகின்றன. இப்பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் "ஹாண்ட் இன் ஹாண்ட்' தொண்டு நிறுவனத்துடன் இணைந்து சிறப்பாக செயல்படுத் தப்பட்டு வருகிறது. குப்பை சேகரிக்கும் பணியில் 56 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தினசரி மூன்று சக்கர சைக்கிளில் ஒவ்வொரு பகுதியாக சென்று குப்பைகளை சேகரிக்கின்றனர். பின், திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்படுகின்றன.

மக்காத குப்பைகள் கைவேலி பகுதியில் கொட்டப்படுகிறது. மக்கும் குப்பைகள் 38 தொட்டிகளில் கொட்டி உரம் தயாரிக்கப்படுகிறது. 20 தொட்டிகளில் மண்புழு உரமும், 18 தொட்டிகளில் மக்கும் உரமும் தயாரிக்கப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை கிடங்கை சுற்றி, ஏற்கனவே நடப்பட்டிருந்த செடிகள் அகற்றப் பட்டு, புதியதாக கத்திரி, தக்காளி, வெண்டை, கீரைகள் ஆகிய செடிகள் நடப்படவுள்ளன. இந்நிலையில், இத்திட்டத்தை மேலும் நவீனப்படுத்தும் வகையில் காஞ்சிபுரம் மாவட் டத் திலேயே முதல் முறையாக உரம் தயாரிப்பதற்கு குப்பை கழிவுகளை எருவாக்கும் இயந் திரம் பயன்படுத்தப்படவுள்ளது.

இது குறித்து பேரூராட்சி தலைவர் அரவிந்த் ரமேஷ் கூறுகையில்,"மக்கும் குப்பைகளை தொட்டியில் கொட்டி உரமாக்குவதற்கு 50 நாட்களுக்கு மேல் ஆகிறது. எனவே, குறைந்த நாட்களில் உரம் தயாரிப்பதற்காக இந்த இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த இயந்திரத்தின் மதிப்பு ஏழு லட்சம் ரூபாய். இதன் மூலம் தினசரி ஒன்றரை டன் குப்பைகள் அரைக்கப்படும். இதனால், 20 நாட்களிலேயே உரம் தயாராகிவிடும். மேலும், பேரூராட்சியில் மூன்று கோடி ரூபாய் செலவில் நவீன திருமண மண்டபமும் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றார்.

Last Updated on Tuesday, 02 February 2010 06:13