Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வுப் பேரணி

Print PDF

தினமணி 11.08.2010

திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வுப் பேரணி

திருப்பத்தூர், ஆக. 10: திருப்பத்தூரில் சுகாதார இயக்கமும், பேரூராட்சியும் இணைந்து செவ்வாய்க்கிழமை திடக்கழிவு மேலாண்மைத் திட்ட விழிப்புணர்வுப் பேரணி நடத்தியது.

ஆர்.சி.பாத்திமா பள்ளி முன்பு பேரணி தொடங்கியது. இதில் சுகாதாரத் துறையினர், வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார், மருத்துவ அலுவலர் ராஜ்குமார், பேரூராட்சி மன்றத் தலைவர் என்.எம்.சாக்ளா, துணைத் தலைவர் ஆர்.கார்த்திகேயன், செயல் அலுவலர் அமானுல்லா, துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர், கவுன்சிலர்கள் முருகானந்தம், கவிதாகுமார், சரவணப்பெருமாள், துப்புரவு மேற்பார்வையாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று அண்ணா சிலையை அடைந்தது. அங்கு சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்து பேரூராட்சி மன்றத் தலைவர் என்.எம்.சாக்ளா பேசினார். சுகாதாரத் துறை ஆய்வாளர் சகாயஜெரால்டுராஜ் நன்றி கூறினார்

 

நரேலா&பாவனா பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சுற்றுச்சூழல் துறை அனுமதி

Print PDF

தினகரன் 09.08.2010

நரேலா&பாவனா பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சுற்றுச்சூழல் துறை அனுமதி

புதுடெல்லி, ஆக. 9: டெல்லியில் ஒரு நாளைக்கு 6 ஆயி ரம் டன் முதல் 7 ஆயிரம் டன் வரை குப்பைகள் சேருகின்றன. அவை காஜிப்பூர், பலஸ்வா&ஜகாங்கீர்புரி, ஓக்லா ஆகிய இடங்களில் கொட்டப்படுகின்றன. 3 குப்பை கிடங்குகளும் நிரம்பி வழிவதால், குப்பைப்பிரச்னை மாநகராட்சிக்கு பெரும் பிரச்னையாக உள்ளது.

இந்நிலையில், ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலா ண்மைத் திட்டத்தை வடமேற்கு டெல்லியின் நரேலா& பாவனா பகுதியில் செயல்படுத்த மாநகராட்சி முடிவு செய்தது. ரூ70 கோடி செலவிலான இந்தத் திட்டம் 100 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்தப்படவுள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்த ராம்கி என்விரோ இன்ஜினியரிங் நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. திட்டப்பகுதியின் அருகில் இந்திய விமானப்படை தளம் அமைந்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். குப்பைகளைத் தேடி வரும் பறவைகள், விமானங்கள் மீது மோத வாய்ப்பு உள்ளது என்று விமானப்படை அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் இத்திட்டத்தை நிறைவேற்ற மாநகராட்சிக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. ‘ஆபத்து ஏற்படுத்தும் கழிவுகள்&2008 விதிகளுக்கு உட்பட்டு திட்டத்தை செயல்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டுமெனவும், நிலத்தடி நீர்மட்டத்தின் அளவைக் கொண்டு, குப்பைகள் கொட்டும் இடத்தின் ஆழத்தை இறுதி செய்ய வேண்டுமெனவும் மாநகராட்சிக்கு சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தியுள்ளது.

 

திடக்கழிவு மேலாண்மை திட்டம்

Print PDF

தினமலர் 06.08.2010

திடக்கழிவு மேலாண்மை திட்டம்

சோழிங்கநல்லூர் : சோழிங்கநல்லூர் பேரூராட்சியில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை, கூவம் நதிக்கரையோரம் உள்ள 25க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர்கள் பார்வையிட்டனர்.சோழிங்கநல்லூர் பகுதியில் நாள் ஒன்றுக்கு ஐந்து டன் குப்பைகள் சேகரமாகின்றன. அவற்றை எருவாக்கும் வகையில், 2007ம் ஆண்டு முதல் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இந்த வகையில் மாதத்திற்கு மூன்று டன் மக்கும் உரமும், 300 கிலோ மண்புழு உரமும் தயாரிக்கப்படுகிறது.மக்கும் உரம் கிலோ மூன்று ரூபாய்க்கும், மண்புழு உரம் கிலோ 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, இத்திட்டம் அப்பேரூராட்சிக்கு பயன் அளித்துள்ளது.இந்நிலையில், கூவம் நதிக்கரையில் உள்ள 25க்கும் மேற்பட்ட கிராமங்களின் ஊராட்சித் தலைவர்களுக்கு திடக்கழிவு சேகரிப்பு, அகற்றல் மற்றும் மேலாண்மை முறைகளை மேம்படுத்துவது குறித்த ஒருநாள் கலந்துரையாடல் பட்டறை நடந்தது.அதன் ஒரு பகுதியாக சோழிங்கநல்லூர் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை ஊராட்சித் தலைவர்கள் பார்வையிட்டனர்.அவர்களுக்கு குப்பையில் இருந்து மக்கும் உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிப்பது குறித்து பேரூராட்சித் தலைவர் அரவிந்த் ரமேஷ் விளக்கினார். இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் உமாபதி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

 


Page 44 of 66