Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

ஆண்டுதோறும் 50 ஆயிரம் டன் சேருகிறது எலக்ட்ரானிக் கழிவுகளை கொட்ட 5 இடங்கள் தேர்வு

Print PDF

தினகரன் 03.08.2010

ஆண்டுதோறும் 50 ஆயிரம் டன் சேருகிறது எலக்ட்ரானிக் கழிவுகளை கொட்ட 5 இடங்கள் தேர்வு

மும்பை,ஆக.3: மும்பையில் வெளியாகும் எலக்ட்ரானிக் கழிவுகளை கொட்டுவதற்கு தலோஜா உட்பட ஐந்து இடங்களை மும்பை பெரு நகர வளர்ச்சி ஆணையம் தேர்வு செய்துள்ளது.

மும்பையில் ஒவ்வொரு ஆண்டும் 50 ஆயிரம் டன் எலட்க்ரானிக் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. அவை வியாபாரிகளிடம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கழிவுகள் சுற்றுச் சூழலுக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது. டிவி, கம்ப் யூட்டர், பிரிண்டர் உள் ளிட்ட எலக்ட்ரானிக் பொருள் கழிவுகள் சில வற்றில் நச்சுத்தன்மை கொண்ட ரசாயான பொருட்கள் கலந்திருக் கின்றன. எனவே அவற்றை பாதுகாப்பான முறையில் பிரித்தெடுத்து அப்புறப்படுத்த எம்.எம்.ஆர்.டி..முடிவு செய்துள் ளது.

இதற்காக தலோஜா மற்றும் வசாய் போன்ற பகு தியில் 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடங்கள் தனியாரிடம் கொடுக்கப்பட்டு அங்கு எலட்க்ரானிக் கழிவுகள் கொண்டு செல்லப்பட்டு பித்தளை போன்ற உலோ கங்கள் பிரித்தெடுக்கப்படும். பின்னர் கழிவுகள் தாழ்வான பகுதிகளை நிரப்ப பயன்படுத்தப்படும் என்று எம்.எம்.ஆர்.டி.ஏ தெரி வித்து இருக்கிறது.இத் திட்டத்தை தனியார் ஒத்துழைப்புடன் நிறை வேற்ற முடிவு செய்யப்பட் டுள்ளது.

இது தவிர தலோ ஜாவில் 107 ஹெக்டேர் நிலப்பரப்பில் குப்பைகளை அறிவியல் முறையில் சுத்திரிகரிக்கும் திட்டத் தையும் செயல்படுத்த மும்பை பெருநகர வளர்ச்சி ஆணையம் முடிவு செய் துள்ளது. இங்கு 7 மாநக ராட்சியில் வெளியாகும் குப்பைகள் கொண்டு வரப் பட்டு சுத்கரிக்கப்படு கிறது.

 

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தால் நிலத்துக்கோ, நீருக்கோ பாதிப்பில்லை திட்ட செயலாளர் விளக்கம்

Print PDF

தினகரன் 30.07.2010

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தால் நிலத்துக்கோ, நீருக்கோ பாதிப்பில்லை திட்ட செயலாளர் விளக்கம்

சென்னிமலை, ஜூலை 30:தொழிற்சாலை கழிவுகளை சேகரித்து வைக்கும் நச்சுக்கழிவு மேலாண்மை திட்டம் பெருந்துறை சிப்காட் பகுதியில் அமைக்கப்படுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று முன்தினம் கலெக்டர் சுடலைக்கண்ணன் தலைமை யில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்திலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

சென்னிமலை, ஜூலை 30:தொழிற்சாலை

கழிவுகளை சேகரித்து வைக்கும் நச்சுக்கழிவு மேலாண்மை திட்டம் பெருந்துறை சிப்காட் பகுதியில் அமைக்கப்படுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று முன்தினம் கலெக்டர் சுடலைக்கண்ணன் தலைமை யில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்திலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திடக்கழிவு மேலாண் மை திட்டத்தின் செயலாளர் ராமதாஸ் கூறியதாவது:

தொழிற்சாலைகளுக்கு வரும் இன்னல் விளைவிக்கக்கூடிய கழிவுகளை சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் அப்புறப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

உச்சநீதிமன்ற அறிவுறுத்தல் பேரில் இத்தகைய திடக்கழிவு மேலாண்மை திட்டம் இந்தியா முழுவதும் அமைத்து இயங்கி வருகிறது. இது தொழிற்சாலை கழிவுகள் மேலாண்மை குழுவு சென்னை மூலம் நிறைவேற்றப்படுகிறது.

இதன் கிளை அலுவலகம் ஈரோட்டிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 675 தொழிலகங்கள் அங்கத்தினர்களாக உள்ளனர். தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து தொழிலக கழிவுகள் சென்னையில் உள்ள கும்மிடிபூண்டிக்கு கொண்டு செல்லப்பட்டு அறிவியில் முறையில் அப்புறப்படுத்தப்படுகிறது. இதனால் போக்குவரத்துச் செலவும் மற்ற அபாயங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே தமிழக அரசு தொழிற்காலை வளர்ச்சிக்கு ஏற்ப பல இடங்களில் இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்கேற்ப ஈரோட்டில் இத்திட்டடம் ஒன்றை செயலாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இங்கு அப்புறப்படுத்தப்படும் கழிவுகள் எரிக்கப்படப்போவதில்லை. பெருந்துறை சிப்காட் பகுதியில் சுமார் 20.2 ஹெக்டேர் நிலத்தில் இத்திட்டம் அமைய உள்ளது. இதில் 30 சதவீத இடம் பசுமைக்கும் 15 முதல் 20 சதவீதம் சாலை மற்றும் கட்டமைப்பு பகுதிக்காகவும் மீதி இடத்தில் ஐஐடி சென்னை வடிவமைத்து ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டப்படி நிலப்பரப்புகள் செயல்படுத்தப்படும். இதனை அவ்வப்போது ஐஐடி கண்காணித்து ஒப்புதலின்பேரில் நிலத்தடி நீர் பாதிக்காதபடி சிபிசிபி ன் பரிந்துரைபேரில் கட்டப்படும். சுற்றி ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து அந்த தண்ணீரின் தன்மையை ஐஐடி கண்காணிக்கும். மாதத்துக்கு சுமார் 380 டன் கழிவுகள் இங்கு அப்புறப்படுத்தப்பட உள்ளது. அதனை சுற்றி அழகிய பூங்காவும் அமைக்கப்படும்.

இது போன்ற அமைப்புகள் இந்தியாவில் பல இடங்களில் தற்போது செயல்படுகின்றன. இதனால் விவசாயிகளே பொதுமக்களோ அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

 

சிட்லப்பாக்கம் பேரூராட்சியில் 2 ஆண்டாக கிடப்பில் போட்டுள்ள திரவக்கழிவு மேலாண்மை திட்டம் மீண்டும் செயல்படுத்த கோரிக்கை

Print PDF

தினகரன் 27.07.2010

சிட்லப்பாக்கம் பேரூராட்சியில் 2 ஆண்டாக கிடப்பில் போட்டுள்ள திரவக்கழிவு மேலாண்மை திட்டம் மீண்டும் செயல்படுத்த கோரிக்கை

தாம்பரம், ஜூலை 27: சிட்லபாக்கம் பேரூராட்சியில் திரவக்கழிவு மேலாண்மை திட்டத்தை அதிகாரிகள் கிடப்பில் போட்டுள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏரிகளில் நீர் மாசுபடுவதைத் தடுக்க திரவக்கழிவு மேலாண்மை திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்து, உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுத்த அறிவுறுத்தியது. அதற்காக மாநில நிதி பகிர்வு திட்டத்தின் கீழ் நிதியும் ஒதுக்கியது. இந்த திட்டத்தை செயல்படுத்த காஞ்சிபுரம் மாவட்டம் சிட்லப்பாக்கம் பேரூராட்சி தேர்வு செய்யப்பட்டது. இங்கு 18 வார்டுகள் உள்ளன. 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இப்போது இப்பகுதி வேகமாக வளர்ந்து வருகிறது.

8&வது வார்டு பாலாஜி அவென்யூ பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பில் திரவக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டது. தினமும் 2 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரித்து செம்பாக்கம் பெரிய ஏரியில் விடும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இதனால் கழிவுநீர் ஏரிக்கு செல்வது தடுக்கப்பட்டது. நிலத்தடிநீர் மாசுபடுவதும் தடுக்கப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.

இந்த சிறப்பு வாய்ந்த திட்டம் பராமரிப்பின்றி கடந்த 2 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் மீண்டும் ஏரிக்கு செல்கிறது. அதிகாரிகளின் அலட்சியத்தால் திட்டத்தின் பலன் கிடைக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

 


Page 45 of 66