Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு முகாம்

Print PDF

தினமலர் 16.06.2010

திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு முகாம்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு முகாம் மற்றும் கொழு கொழு குழந்தைகள் போட்டி நடந்தது.துப்புரவு அலுவலர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். மேலாளர் சிவசங்கரன் முன்னிலை வகித்தார். எழுத்தர் பாபு வரவேற்றார். சேர்மன் கெய்க்வாட்பாபு கொழு கொழு குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைக்கு பரிசு வழங்கினார். சமுதாய அமைப்பாளர் உமா, அமுதா, செவிலியர்கள் விஜயலட்சுமி, ராணி உட் பட பலர் கலந்து கொண்டனர்.முகாமில் நடந்த கொழு கொழு குழந்தைகள் போட்டியில் 10 மாத குழந்தை பிரகதீஸ்வரன் முதல் பரிசை வென்றது.முகாமில் நகராட்சி பகுதியில் சேரும் குப்பைகளால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. மக்கள் விழிப்புணர்வுடன் மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து வைத்து துப்புரவு பணியாளர்களிடம் வழங்க வேண்டும். அப் போது தான் குப்பையில் இருந்து உரம் தயாரிக்க முடியும். மக்களிடம் மகளிர் சுய உதவிக்குழுவினர் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கேட் டுக் கொள்ளப்பட்டது.

 

கோவில்பட்டி நகராட்சி பகுதி பிளாஸ்டிக் கழிவுகள் சிமென்ட் ஆலைக்கு அனுப்பப்பட்டன

Print PDF

தினகரன் 09.06.2010

கோவில்பட்டி நகராட்சி பகுதி பிளாஸ்டிக் கழிவுகள் சிமென்ட் ஆலைக்கு அனுப்பப்பட்டன

கோவில்பட்டி, ஜூன்.9: கோவில்பட்டி நகராட்சி பகுதியில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் தாழையூத்து சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கோவில்பட்டி நகராட்சியில் தெருக்கள், வீடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் கழிவுகள் தாழையூத்து சிமென்ட் தொழிற்சாலைக்கு லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. நகராட்சி கமிஷனர் விஜயராகவன் உத்தரவின்பேரில், நகராட்சி சேர்மன் மல்லிகா தலைமையில் சுகாதார அலுவலர் ராஜசேகரன் முன்னிலையில் தாழையூத்திற்கு லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர்கள் சீனிவாசன், சீனிராஜ் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

 

மேயர் சகானி தகவல் நவீன குப்பைக் கிடங்குகள் அமைக்க மாநகராட்சி திட்டம்

Print PDF

தினகரன் 07.06.2010

மேயர் சகானி தகவல் நவீன குப்பைக் கிடங்குகள் அமைக்க மாநகராட்சி திட்டம்

புதுடெல்லி, ஜூன் 7: டெல்லியிலுள்ள குப்பைக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன. அதனால்,மறுசுழற்சி செய்யும் வகையில் நவீன குப்பைக் கிடங்குகளை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக மேயர் சகானி கூறினார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, வர்த்தக மற்றும் தொழில் கழகம் சார்பில் "சுற்றுப்புறச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம்" என்ற தலைப்பில் கருத்தரங்கத்தை பி.எச்.டி. ஹவுசில் நடத்தியது.

கருத்தரங்கில், டெல்லி மேயர் பி.ஆர்.சகானி கலந்து கொண்டு பேசியதாவது:

டெல்லியில் ஒரு நாளை க்கு 6,500 டன் திடக்கழிவுகள் சேருகின்றன. மாநகராட்சியில் பலஸ்வா, காஜிப்பூர், ஓக்லா ஆகிய இடங் களில் குப்பைக் கிடங்குகள் உள்ளன. இந்த 3 குப்பைக் கிடங்குகளிலும், அதன் கொள்ளளவைத் தாண்டி குப்பைகள் நிறைந்து வழிகின்றன.

இது, மாநகராட்சி எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவாலாகும். டெல்லியில் சேரும் குப்பைகளை கொட்டுவதற்கு வேறெங்கும் குப்பைக் கிடங்குகள் இல்லை. அதனால் 3 குப்பைக் கிடங்குகள் குப்பைகளைக் கொட்டுவதற்கான இடம் மட்டுமல்ல, குப்பைகளை குறைப்பதற்குமான இடமாக மாற்றப்பட வேண்டியது அவசியம்.

டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குப்பைகளை மறுசுழற்சி செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். நகரின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு அங்கமாக, டெல்லியில் குப்பைகள் இல்லா நிலையை உருவாக்க முயற்சித்து வருகிறோம். அதற்காக, குப்பைகளை மறுசுழற்சி செய்யும் நவீன குப்பைக் கிடங்குகள் உருவாக்கப்படும். இந்த குப்பைக் கிடங்குகளால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

திரவ வகையிலான கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை களைவதற்காக நீரில்லா கழிப்பிடங்களை மாநகராட்சி அறிமுகப்படுத்தியது. அதேபோல, மாநகராட்சியின் பூங்காக்கள், தோட்டங்களில் சேரும் குப்பைகளை புழுக்கள், பூச்சிகளைக் கொண்டு உரமாக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நாட்டிலேயே மிகப்பெரிய மாநகராட்சியாக டெல்லி உள்ள நிலையில், இங்கு சேரும் திடக்கழிவுகளை சேகரிப்பது, கிடங்குகளுக்கு கொண்டு செல்வது, அழிப்பது ஆகிய செயல்பாடுகளை சுற்றுப்புறச்சூழலுக்கோ, தட்பவெப்பநிலைக் கோ எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் மேற்கொள்வதற்கு மாநகராட்சி உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு சகானி பேசினார்.

 


Page 48 of 66