Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு குர்கானில் நவீன வசதியுடன் திடக்கழிவு மேலாண்மை நிலையம்

Print PDF

தினகரன் 03.06.2010

மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு குர்கானில் நவீன வசதியுடன் திடக்கழிவு மேலாண்மை நிலையம்

குர்கான், ஜூன் 3: குர்கானில் நவீன வசதியுடன் கூடிய திடக்கழிவு மேலாண்மை நிலையம் அமைக்கப்பட உள்ளது என குர்கான் மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் குல்லார் தெரிவித்தார்.

குர்கான் மாநகராட்சி தொடங்கப்பட்டு 2ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, நிருபர்களிடம் கமிஷனர் குல்லார் கூறியதாவது:

குர்கான் மாநகராட்சி தொடங்கப்பட்டு 2 ஆண்டு நிறைவு பெற்றுவிட்டது. குர்கானில் வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.74.83 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. ரூ.56.64 கோடிக்கு புதிய பணிகள் நடந்து வருகின்றன.

மேலும் ஒவ்வொரு வளர்ச்சிப் பணியும் செயல்படுத்தப்படும் போது அதை கண்காணிக்க அந்தப் பகுதியை சேர்ந்த 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது. இந்த குழுவின் பரிந்துரையில்லாமல் ஒப்பந்தகாரர் களுக்கு எந்தப் பணமும் வழங்கப்படமாட்டாது.

குர்கானில் திடக்கழிவு மேலாண்மை நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற குர்கான் மக்களி நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட உள்ளது. சக்கர்பூர் பகுதியில் உள்ள கச்ரா சவுக்கில்தான் இதுநாள்வரை குப்பைகள் கொட்டப்படுகின்றன.

பந்த்வாரி மாவட்டத்தில் நவீன வசதியுடன் கூடிய திடக்கழிவு மேலாண்மை நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்.

குருகான் என்பதுதான் குர்கான் என்று மருவி விட்டது. நாட்டில் உள்ள எல்லா மாநகராட்சிகளுக்கும் நிர்வாகத்தில் குருவாக குர்கான் திகழும்.

குர்கானில் 8 ஏக்கர் பரப்பில் நவீன பசு காப்பகம் அமைக்கப்பட்டுள்து. இங்கு 500க்கும் அதிகமான பசுக்கள், காளைகள், எருமைகள் பாதுகாக்கப்படுகின்றன. அக்டோபர் மாதத்துக்கு பின், குர்கானில் தெருக்களில் கால்நடைகள் சுற்றி திரிவதை பார்க்க முடியாது. இவ்வாறு குல்லார் கூறினார்.

 

உடன்குடியில் 20 மூடை பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு

Print PDF

தினமலர் 01.06.2010

உடன்குடியில் 20 மூடை பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு

உடன்குடி: உடன்குடியில் 20 மூடைகள் கழிவு பிளாஸ்டிக் சேகரிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உத்திரவுப்படி உடன்குடி டவுன் பஞ்.,பகுதியில் உள்ள தெருக்கள், சாலையோரங்களில் பொதுமக்களால் தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக் கப், பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் பைகள் ஆகியவை டவுன் பஞ்.,பணியாளர்களால் சேகரித்து வைக்கப்பட்டு 20 மூடைகள் திருச்செந்தூர் டவுன் பஞ்.,க்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து திருச்செந்தூர், உடன்குடி பஞ்.,செயல் அலுவலர்கள் மூலம் திருநெல்வேலி இந்தியா சிமெண்ட் நிறுவனத்திற்கு பிளாஸ்டிக் மறு சுழற்சி திட்டத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டது. இப்பணி தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என உடன்குடி டவுன் பஞ்.,தலைவர் சாகுல்ஹமீது அறிவித்துள்ளார்.

 

திருவொற்றியூரில் குப்பையை பணமாக்கும் திட்டம் தொடக்கம்

Print PDF

தினகரன்    25.05.2010

திருவொற்றியூரில் குப்பையை பணமாக்கும் திட்டம் தொடக்கம்

திருவொற்றியூர், மே 25: திருவொற்றியூர் நகராட்சியில் குப்பையை பணமாக்குவோம் திட்டத்தை மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி தொடங்கி வைத்தார்.

திருவொற்றியூர் சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில், ‘குப்பையை பணமாக்குவோம்என்ற திட்டத்தை, ரெகோபோத் தொண்டு நிறுவனம் மற்றும் ஐடிசி நிறுவனத்துடன் இணைந்து திருவொற்றியூர் நகராட்சி உருவாக்கியுள்ளது.

48 வார்டுகளிலும் சேரும் காகிதம் மற்றும் பிளாஸ்டிக் போன்ற குப்பைகளை பொதுமக்களிடம் இருந்து மளிர் குழு மூலம் விலை கொடுத்து வாங்கி, அதை தொண்டு நிறுவன பொறுப்பாளர்களிடம் கொடுத்து பணமாக்குவதும், இந்த பணத்துக்கு சலுகை விலையில் ஐடிசி நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களை பெற்று, அதை மகளிர் குழு மூலம் விற்பனை செய்து வேலைவாய்ப்பு பெறும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

திட்ட தொடக்க விழா திருவொற்றியூர் பெரியார்நகரில் நடந்தது. ரெகோபோத் தொண்டு நிறுவன இயக்குனர் மரியசூசை தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் கலைச்செல்வன் வரவேற்றார். மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி திட்டத்தை துவக்கி வைத்தார். அமைச்சர் சாமி பங்கேற்பு

 


Page 50 of 66