Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

மண்புழு உர அலகு அமைக்க மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 1. 95 கோடி மானியம்

Print PDF

தினமலர் 19.02.2010

மண்புழு உர அலகு அமைக்க மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 1. 95 கோடி மானியம்

திருச்சி : திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு மண்புழு உர அலகு அமைத்திட ரூ. ஒரு கோடியே 95 லட்சம் மானிய தொகையை வேளாண் துறை அமைச்சர் வழங்கினார்.திருச்சி மாவட்டத்தில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மண்புழு உர அலகு அமைத்திட மானியம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் சவுண்டையா தலைமை வகித்தார். போக்குவரத்து துறை அமைச்சர் நேரு முன்னிலை வகித்தார்.

வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருங்காபுரி ஒன்றியம் கொடும்பப்பட்டியை சேர்ந்த மாணிக்கம், சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த தங்கவேலு, எண்டபுளியைச் சேர்ந்த ரவிச்சந்திரன், அந்தநல்லூர் ஒன்றியத்தை சேர்ந்த கவுதமன், ஸ்ரீரங்கம் மேலூரை சேர்ந்த சண்முகம், துறையூர் ஒன்றியம் பொன்னு சங்கம்பட்டியை சேர்ந்த தனபால் ஆகிய ஆறு பேருக்கு தலா ரூ. 32 ஆயிரத்து 500 வீதம் மொத்தம் ஒரு கோடியே 95 லட்சம் ரூபாயை மண் புழு உர அலகு அமைத்திட மானியமாக வழங்கினார்.நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குநர் பொன்னுச்சாமி, துணை இயக்குநர் ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Friday, 19 February 2010 07:35
 

திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு : பெங்களூரு கல்வி நிறுவனத்திற்கு அனுமதி

Print PDF

தினமலர் 16.02.2010

திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு : பெங்களூரு கல்வி நிறுவனத்திற்கு அனுமதி

கோவை : மாநகராட்சி பகுதியில் பொதுமக்களிடையே திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த பெங்களூரிலுள்ள "சென்டர் பார் என்விரான்மென்ட்' கல்வி நிறுவனத்திற்கு, இரண்டாண்டுகளுக்கு விழிப்புணர்வு பணி மேற்கொள்ள வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு, நேற்று அனுமதி வழங்கியது. கோவை மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு கூட்டம் மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. தலைவர் நந்தகுமார் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சியில், ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தும் பணிக்கு 96.51 கோடியில் தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கைக்கு, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.இத்திட்டம் குறித்து மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலுள்ள, பொதுமக்களிடையே திட்டக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிக்கு 45 லட்சரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இப்பணியை மேற்கொள்ள ஒப்பந்தபுள்ளி வரவழைக்கப்பட்டதில் பெங்களூருவை சேர்ந்த "சென்டர் பார் என்விரான்மென்ட்' கல்வி நிறுவனம், ஒப்பந்தப்புள்ளி திறனாய்வுக்குழுவினால் தேர்வு செய்யப்பட்டது.இந்நிறுவனம் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் ஒப்பந்தப்புள்ளி தொகையை விலை குறைப்பு செய்ய மாநகராட்சி வேண்டுகோள் விடுத்தது. அதன் படி 43 லட்சத்து 53 ஆயிரத்து 200 ரூபாயாக விலை குறைப்பு செய்துள்ளது.

இதனடிப்படையில் அனைத்து வார்டுகளிலும் பொதுமக்களிடையே திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்த, பெங்களூரிலுள்ள "சென் டர் பார் என்விரான் மென்ட்' கல்வி நிறுவனம், இரண்டாண்டுகளுக்கு செயல்படுத்த வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு நேற்று அனுமதி வழங்கியது.

மாநகராட்சி மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கு தேவையான அறிவியல் ஆய்வக உபகரணங்கள் மற்றும் இதர பொருட்கள் வாங்க 46 லட்ச ரூபாயில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. பிரதான சாலைகளை அழகுபடுத்துதல், நடைபாதை தளம் அமைப்பது போன்ற பணிகள் 50 லட்ச ரூபாயில் மேற்கொள்ள அனுமதி வழங் கப்பட்டது.கூட்டத்தில் நிதிக்குழு உறுப்பினர்கள் ஷோபனா, செந்தில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Tuesday, 16 February 2010 02:23
 

மக்கும், மக்காத குப்பைகளை பிரித்தெடுப்பதில் சுணக்கம்

Print PDF

தினமலர் 11.02.2010

மக்கும், மக்காத குப்பைகளை பிரித்தெடுப்பதில் சுணக்கம்

போடி: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணியில் போடி நகராட்சி நிர்வாகம் 'சுணக்கம்' காட்டி வருவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது.

அரசு உத்தரவு படி போடி நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களை கொண்டு ஊர்வலங்கள் நடத்தப்பட்டும், துண்டு பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டது. தெருக்கள் தோறும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் வகையில் தனித்தனி தொட்டிகளும் அமைக்கப்பட்டன. வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், ரோட்டோர கடை வைத்திருப்பவர்கள் பாலித்தீன் பைகளை பயன்படுத்தக் கூடாது எனவும், மீறுவோறுக்கு ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. குப்பைகளை சேகரிக்கும் வகையில் துப்புரவு பணியாளர்களுக்கு தனித்தனி தொட்டிகள் கொண்ட வண்டிகள் தரப்பட்டது. தற்போது இத்திட்டத்தை செயல்படுத்துவதில் நகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருவதால் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் பிளாஸ்டிக் குப்பைகளின் சங்கமமாக போடி நகராட்சி பகுதி விளங்குகிறது.இதனை அகற்றும் வகையில் துப்புரவு பணிகள் நடைபெறாததினால் சாக்கடை கால்வாய்கள் அடைத்துக்கொண்டு கழிவுநீர் செல்ல வழியில்லாமல் பொதுமக்களுக்கு சுகாதாரகேடு ஏற்படுகிறது.சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கும் வகையில் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை அகற்றவும், நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பயன்பாடுகள் குறித்து கண்காணித்தும் போடி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Last Updated on Thursday, 11 February 2010 07:59
 


Page 53 of 66