Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

160 பகுதிகளுக்கு பிளாஸ்டிக் குப்பைத் தொட்டிகள்: ஆணையர்

Print PDF

தினமணி              10.07.2013

160 பகுதிகளுக்கு பிளாஸ்டிக் குப்பைத் தொட்டிகள்: ஆணையர்

திருச்சி மாநகராட்சியில் 160 பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்பகுதிகளிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பிளாஸ்டிக் குப்பைகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார் மாநகராட்சி ஆணையர் வே.ப. தண்டபாணி.

திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்புரவுப் பணியாளர்களுக்கான பயிற்சி முகாமுக்கு தலைமை வகித்து அவர் பேசியது:

மக்காத பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளைத் தரம் பிரித்து, மாரியம்மன் கோவில் தெரு, வாமடம், பறவைகள் சாலை, அம்பேத்கர் நகர் ஆகிய இடங்களிலுள்ள உலர் வள மையங்களில் சேகரிக்கப்படுகிறது.

சேகரிக்கப்படும் மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் விற்பனை செய்யப்பட்டு, அதிகளவில் மக்காத குப்பைகள் சேகரிக்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கு  பரிசுகள் வழங்கப்படும். மக்கும் குப்பைகள் முழுமையாக உரம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும்.

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் சேகரிக்கப்படும் உலர் கழிவுகள் மற்றும் மக்கும் குப்பைகள் தொடக்க நிலையிலேயே பிரிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படும், மக்காத குப்பைகளைத் தொடக்க நிலையிலேயே தரம் பிரிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் நகர் நல அலுவலர் அல்லி, உதவி ஆணையர்கள் தயாநிதி, தனபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

ஆலங்காயம் பேரூராட்சியில் அதிகாரி ஆய்வு

Print PDF

தினமணி               01.07.2013

ஆலங்காயம் பேரூராட்சியில் அதிகாரி ஆய்வு

ஆலங்காயம் தேர்வுநிலை பேரூராட்சியில் பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குநர் மலையமான் திருமுடிகாரி ஆய்வு செய்தார்.

திடக் கழிவு மேலாண்மைத் திட்டத்தின் சார்பில், இங்குள்ள புலுகூர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள திடக் கழிவுகள் தரம் பிரித்து வைத்திருப்பதையும், சுகாதார வளாகங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களையும் அவர் பார்வையிட்டார். பின்னர் பேரூராட்சி அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அவர் பார்வையிட்டார்.

இதையடுத்து, சௌர்ண ஜெயந்தி சாகரி ரோஜ்கார் யோஜன திட்டத்தின் சார்பில் பயிற்சி பெற்ற மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு நகர்ப்புற பெண்கள் சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின்படி ரூ.1.20 லட்சம் அரசு மானியத்துடன் வங்கிக் கடனை அவர் வழங்கினார்.

மேலும், பயனாளிகள் பங்குத் தொகையில் ரூ.3.50 லட்சத்தில் பாக்கு மட்டையில் தட்டுகள் செய்யும் இயந்திரத்தில் நடைபெறும் பணிகளையும் அவர் பார்வையிட்டார்.

பேரூராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளா கந்தன், துணைத் தலைவர் பாண்டியன், செயல் அலுவலர் கோபாலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

பெ.நா.பாளையம் பேரூராட்சி மக்கள் இயற்கை உரம் தயாரிக்க ஊக்குவிப்பு

Print PDF

தினமணி                28.06.2013 

பெ.நா.பாளையம் பேரூராட்சி மக்கள் இயற்கை உரம் தயாரிக்க ஊக்குவிப்பு

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களே தங்களது வீடுகளில் இயற்கை உரம் தயாரிப்பதை ஊக்குவிக்கும் வகையில்,  தன்னார்வலர்களுக்கு "ஹேண்ட் இன் ஹெண்ட்' என்ற அமைப்பின் மூலமாக இயற்கை உர மண்பானைகளை இலவசமாக வழங்கியுள்ளது.

 இந்த அமைப்பு, மட்கும் மற்றும் மட்காத பொருள்களைப் பிரித்து அக் கழிவிலிருந்து பயனுள்ள பொருள்களைத் தயாரிக்கும் திட்டத்தை இப் பேரூராட்சியில் செயல்படுத்துகிறது. கடந்த ஆண்டு வீடுகளுக்கே நேரடியாகச் சென்று குப்பையைப் பெறும் திட்டத்தை செயல்படுத்தியது. இப்போது, பொதுமக்களே தங்களது வீடுகளில் உருவாகும் காய்கறிக் கழிவைக் கொண்டு இயற்கை உரம் தயாரிக்கும் வகையில் 3 மண்பானை உபகரணங்களை இலவசமாக வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக 45 நாள்களில் சிறந்த இயற்கை உரத்தை தயாரித்துப் பயன்படுத்த இயலும்.

 இத் திட்ட தன்னார்வப் பயனாளிகளுக்கு இந்த உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. செயல் அலுவலர் துவாரகநாத் சிங் முன்னிலை வகித்தார். பேரூராட்சித் தலைவர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமை வகித்து உபகரணங்களை வழங்கினார்.

 துணைத் தலைவர் சந்திரன், கவுன்சிலர்கள் குணசேகரன், சுப்பிரமணியன், திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் விமல்குமார், மேற்பார்வையாளர் சுரேஷ், குப்புராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 


Page 21 of 66