Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கில் ஆய்வு

Print PDF
தினமலர்         27.06.2013

திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கில் ஆய்வு


கும்பகோணம்: கும்பகோணம்அருகே தாராசுரம் டவுன் பஞ்.,ல் மேற்கொள்ளப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கினை உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மண்டல டவுன் பஞ்.,களின் உதவி இயக்குனர் விஸ்வநாதன் தாராசுரம் டவுன் பஞ்.,ல் ஆய்வு மேற்கொண்டார். அது சமயம் திடக்கழிவு மேலாண்மை செய்யப்படும் உரக்கிடங்கு மற்றும் உரம் தயாரிக்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உரக்கிடங்கு மேலும் சிறப்பாக செயல்பட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும், 18.25லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொன்னியம்மன் கோவில் குளம் தூர் வாருவதை பார்வையிட்டார். நபார்டு திட்டத்தின் கீழ் 12.50லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பொது சுகாதார வளாக கட்டிடத்தினையும் ஆய்வு மேற்கொண்டார். குளம் மேம்பாட்டில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய ஒப்பந்தக்காரர் நாகராஜனுக்கு தக்க அறிவுரை வழங்கினார்.

ஆய்வின்போது, தாராசுரம் டவுன் பஞ்., செயல் அலுவலர் மோகன்தாஸ், இளநிலை பொறியாளர் வெங்கடேசன், பணி ஆய்வாளர் ஆனந்தக்குமார், துப்புரவு மேற்பார்வையாளர் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
 

திடக்கழிவு மேலாண்மை: உதவி இயக்குநர் ஆய்வு

Print PDF

தினமணி         25.06.2013

திடக்கழிவு மேலாண்மை: உதவி இயக்குநர் ஆய்வு

கும்பகோணம்அருகே தாராசுரம் பேரூராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கினை பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ந. விஸ்வநாதன் தாராசுரம் பேரூராட்சியில் தாராசுரம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை செய்யப்படும் உரக்கிடங்கு மற்றும் உரம் தயாரிக்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உரக்கிடங்கு மேலும் சிறப்பாக செயல்பட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும் ரூ. 18.25 லட்சத்தில்  பொன்னியம்மன் கோவில் குளம் தூர் வாருவதை பார்வையிட்டார். நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.12.50லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பொது சுகாதார வளாக கட்டடத்தை ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, குளம் மேம்பாட்டில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய ஒப்பந்ததாரருக்கு அறிவுரை வழங்கினார்.  ஆய்வின்போது தாராசுரம் பேரூராட்சி செயல் அலுவலர் அ. மோகன்தாஸ், இளநிலை பொறியாளர் வெங்கடேசன், பணி ஆய்வாளர் ஆனந்தக்குமார், துப்புரவு மேற்பார்வையாளர் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

 

"பயோ காஸ்' மூலம் இயங்கும் சமுதாய சமையல் கூடம்:முதன் முதலாக தாம்பரத்தில் துவக்கம்

Print PDF

தினமலர்             16.06.2013

"பயோ காஸ்' மூலம் இயங்கும் சமுதாய சமையல் கூடம்:முதன் முதலாக தாம்பரத்தில் துவக்கம்
 
 
தாம்பரம்:"செப்டிக்டேங்' மற்றும் காய்கறி கழிவுகளில் இருந்து, பயோ காஸ் மூலம் இயங்கும், சமுதாய சமையல் கூடம், தாம்பரத்தில் துவக்கப்பட்டு உள்ளது.

ரூ.10 லட்சம் :தாம்பரம் நகராட்சியில், 39 வார்டுகள் உள்ளன. ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். 21வது வார்டு, குடிசை பகுதி அதிகம் கொண்டது. இந்த வார்டில் மட்டும், 292 குடியிருப்புகள் உள்ளன. 135 வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை. 125 வீடுகளில், எரிவாயு சிலிண்டர் இல்லை.இப்பகுதிவாசிகள், சாலையோரத்தையே கழிப்பிடமாக பயன்படுத்தி வந்தனர். இதனால், அவர்களின் வசதிக்காக, 2003ல், 10 லட்சம் ரூபாய் செலவில், ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டது.இதில், ஏழு பெண்கள் கழிப்பறை, ஐந்து ஆண்கள் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, அப்பகுதி மக்கள் அனைவரும், இந்த சுகாதார வளாகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இப்பகுதி மக்கள் சமையல் செய்ய வசதியாக, "செப்டிக் டேங்' மற்றும் காய்கறி கழிவுகளை கொண்டு, சமுதாய சமையல் கூடம் ஒன்றை அமைக்க, நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. இதை அடுத்து, பூமிக்கு அடியில் முட்டை வடிவிலான எரி கொள்கலன் கட்டப்பட்டது.

12 காஸ் அடுப்புகள்இது, சிமென்ட் கான்கிரீட்டால் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதில், செரிவடைவதால் உருவாகும் எரிவாயு உறுதி செய்யப்பட்டு, அதனடிப்படையில், பயோ காஸ் மூலம் சமையல் செய்யலாம். இதற்காக, 12 காஸ் அடுப்புகள் கொண்ட சமுதாய சமையல் கூடம் கட்டப்பட்டு உள்ளது. கட்டணம் இல்லாத சமையல் கூடத்தை, அப்பகுதி மக்கள், காலை, 6:00 முதல், 9:00 மணி வரையும், மாலை, 5:00 முதல், 8:00 மணி வரையிலும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சமையல் கூடத்தை நேற்று முன்தினம் உள்ளாட்சி துறை அமைச்சர் முனுசாமி, துவக்கி வைத்தார்.
Last Updated on Monday, 17 June 2013 08:55
 


Page 22 of 66