Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

விரைவில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஆர்டிஓ தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு

Print PDF
தினகரன்       04.06.2013

விரைவில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஆர்டிஓ தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு

நெல்லை, : மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ பற்றி எரிவதை தடுக்க விரைவில் ரூ.55கோடிசெலவில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ராமையன்பட்டி மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ பற்றி எரிவதால் நிகழும் பாதிப்பு மற்றும் பொதுமக்களின் மறியல் சம்பவங்கள் தொடர்பாக நெல்லையில் ஆர்டிஓ பெருமாள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. குப்பை யில் இருந்து மின்சாரம் தயா ரிக்கும் திட்டம் அரசால்அறி விக்கப்பட்டு, ரூ.55 கோடி மதிப்பீட்டில் விரி வான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த திட் டத்தை நடைமுறைப்படுத்த அரசு ஒப்பந்தப்புள்ளி பெறுவதற்காக கடந்த மே 2ஆம் தேதி விற்பனை புள்ளிகள் கோரப்பட்டுள் ளன. எனவே அந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டது. பாதாள சாக்கடை கழிவு நீரை கோடகன் கால்வாயில் நேரடியாக திறந்து விடு வதை நிறுத்த வேண்டும்.

ராமையன்பட்டியில் ஈ மற்றும் கொசுக்களை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் பணியினை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும். குப்பை கிடங்கு பகுதியில் நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வா கம் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் உள் ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் மோகன், தச்சை மண்டல உதவி செயற்பொறியாளர் சாமு வேல் செல்வ ராஜ், ராமையன்பட்டி பஞ்சாயத்து துணை தலைவர் மஸ்தான், பாளை ஒன்றிய தேமுதிக பிரமுகர்கள் வெள்ளப்பாண்டி, பால்ராஜ், மதிமுக சிவசங்கர், அன்னை வேளாங்கண்ணி குடி யிருப்போர் நலச்சங்க செய லாளர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 

குப்பை கொட்டுவதற்கு புதிதாகபத்து இடங்கள் தேர்வு

Print PDF
தினமணி       31.05.2013

குப்பை கொட்டுவதற்கு புதிதாகபத்து இடங்கள் தேர்வு


தில்லியின் மூன்று மாநகராட்சிகள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்டுவதற்கு உத்தேசமான பத்து புதிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்டுவதற்கான இடங்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுவதால் தில்லியின் மூன்று மாநகராட்சிகளும் பெரிதும் கவலையில் ஆழ்ந்துள்ளன.

தற்போது குப்பைகள் கொட்டப்பட்டு வரும் நான்கு இடங்களில் மூன்று இடங்களில் குப்பை கொட்ட தில்லி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது. அதையும் மீறி அங்கு மாநகராட்சிகள் குப்பையைக் கொட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

தடை விதிக்கப்படாமல் ஒரே ஒரு இடம் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் குப்பைகளைக் கொட்ட புதிய இடங்களின் தேவை குறித்து மூன்று மாநகராட்சிகளும் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தன.

தில்லி உயர் நீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகுதான் இதற்கு ஒரு தீர்வு கிடைத்தது. அதன்படி மூன்று மாநகராட்சிகளின் ஆணையர்கள், மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அதிகாரிகள் அண்மையில் கூடி, குப்பை கொட்டுவதற்கான புதிய இடங்கள் குறித்து விவாதித்தனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

""இக்கூட்டத்தில், குப்பைக் கொட்ட பத்துப் புதிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பதி சுரங்கப் பகுதியில் 450 ஏக்கர், ஓக்லாவில் 60 ஏக்கர், தஜ்பூர் ஜெய்த்பூர் பஹாரி பகுதியில் 30 ஏக்கர், கித்ரோனி பகுதியில் 150 ஏக்கர், மண்டி கிராமத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் உத்தேசமான ஐந்து இடங்களை தேர்வு செய்து தெற்கு தில்லி மாநகராட்சிக்கு வழங்க இருக்கிறோம். இந்த இடங்களில் கிழக்கு தில்லி மாநகராட்சியுடன் சேர்ந்து தெற்கு தில்லி மாநகராட்சியும் குப்பை கொட்டலாம்.

இதே போல, சுல்தான்பூர் தபாஸ் பகுதியில் 100 ஏக்கர், பூத் கர்ட் பகுதியில் 150 ஏக்கர், ஹமீத்பூர் கிராமத்தில் 27.5 ஏக்கர், பக்தவார் பூர் சாலைக்கு அருகே பல்லா கிராமத்தில் உள்ள 42.5 ஏக்கர், ஹரியாணா எல்லை மற்றும் பல்லா கிராமத்துக்கு இடையே 62.5 ஏக்கர் நிலம் ஆகிய ஐந்து இடங்கள் வடக்கு மாநகராட்சி நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்தப் பத்து இடங்களுக்கு வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டியிருக்கிறது. குப்பைக் கொட்டுவதற்கான புதிய இடங்கள் குறித்த அடுத்த ஆலோசனைக் கூட்டம் வரும் ஜூன் 4-ஆம் தேதி நடைபெறும்'' என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
 

ரூ. 55 கோடியில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்

Print PDF
தினமணி       31.05.2013

ரூ. 55 கோடியில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்


  திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ. 55 கோடி மதிப்பீட்டில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டப் பணிகள் 6 மாதத்திற்குள் தொடங்கப்படும் என மேயர் விஜிலா சத்தியானந்த் வியாழக்கிழமை தெரிவித்தார்.

  இம் மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசர கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் பூ. ஜெகநாதன், ஆணையர் (பொறுப்பு) த. மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர்கள்,  மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

  கூட்டத்தில் பேசிய 14-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் இரா. குமார், தனது வார்டு பகுதியில் குப்பைகளை சரியாக அகற்றப்படாததால், தெருக்களில் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன என குற்றம்சாட்டினார். இதற்கு பதலளித்து மேயர் பேசியதாவது:

   ராமையன்பட்டி குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதால், அங்கு குப்பைகள் கொண்டு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த பிரச்னை புதன்கிழமையுடன் தீர்க்கப்பட்டு, தற்போது குப்பைகள் ராமையன்பட்டிக்கு கொண்டு செல்லப்படுகின்றன.  குப்பை கிடங்கில் அடிக்கடி விபத்து ஏற்படுவதை நிரந்தரமாக தடுக்கும் வகையில், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ரூ. 55 கோடி மதிப்பீட்டில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் 5 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் இந்த திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளி பணிகள் 6 மாதத்திற்குள் தொடங்கப்படும்.

   அதுவரை குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்படாதவாறு அதிகாரிகள் கவனம் செலுத்தி பொதுமக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் மேயர்.

பாளையங்கால்வாய்: காங்கிரஸ் உறுப்பினர் விஜயன் பேசுகையில், குப்பைகள் மற்றும் கட்டட இடிபாடுகள் கொட்டப் படுவதால் பாளையங்கால்வாய் கூவமாக மாறி வருகிறது. இதனை தடுக்கக் நடவடிக்கை எடுக்கப்படும் என பல முறை உறுதியளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார் அவர்.

  இதற்குப் பதிலளித்த மேயர், பாளையங்கால்வாயைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். கால்வாயின் இருபுறங்களிலும் தடுப்புச் சுவர்கள் அமைத்து, கம்பி வேலிகள் அமைக்கப்படும் என்றார்.

  தி.மு.க. உறுப்பினர் கமாலூதீன் பேசுகையில், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களை அவதூறாகச் சித்தரித்து போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த மேயர், இது தொடர்பாக போலீஸார் மூலம் உரிய நடவடிக்கை எடுத்து போஸ்டர் ஒட்டியவர்கள் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தார்.

  இதேபோல் உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு மேயர், ஆணையர் மற்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து சாதாரண கூட்டத்தில் 30 தீர்மானங்களும், அவசர கூட்டத்தில் 30 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

14 நன்றி தீர்மானங்கள்: முன்னதாக, கூட்டம் தொடங்கியதும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து பல்வேறு தீர்மானங்களை மேயர் விஜிலா சத்தியானந்த் கொண்டு வந்தார். திருநெல்வேலி மாநகராட்சியில் 10 இடங்களில் அம்மா மலிவு விலை உணவகங்கள் அமைக்க அனுமதி, இம் மாநகராட்சி புதிய குடிநீர் திட்டத்தை விடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தது, கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடத்த உத்தரவிட்டது, ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தது உள்ளிட்ட 14 நன்றி தெரிவிக்கும் தீர்மானங்களை மேயர் கொண்டு வந்தார். இவைகள் அனைத்தும் உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன.
 


Page 24 of 66