Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

மாநகராட்சி குப்பை கிடங்கில் உரம் உற்பத்தி துவங்கியது

Print PDF

தினகரன்               02.04.2013

மாநகராட்சி குப்பை கிடங்கில் உரம் உற்பத்தி துவங்கியது


மதுரை: மதுரை நகரில் அன்றாடம் சேரும் குப்பை அவனியாபுரம் வெள்ளக்கல்லிலுள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் குவிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக புகார் எழுந்தது. இதை தடுக்க நேரு நகர்ப்புற மேம்பாட்டு திட் டம் மூலம் மாநகராட்சி குப் பை கிடங்கு ரூ.57 கோடி மதிப்பீட்டில் நவீன மயமாக்கப்பட்டு, குப்பையில் இரு ந்து உரம் தயாரிப்பு நிலையம் தனியார் பங்களிப்புடன் நிறுவப்பட்டுள்ளது.

மாநகராட்சி 100 வார்டுகளிலும் தினமும் 600 டன் குப்பை சேருகிறது. இந்த குப்பைகள் 140 மாநகராட்சி வாகனம் மற்றும் 77 ஒப்பந்த வாகனங்கள் மூலம் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதில் மக்காத குப்பை கழிவுகள் பிரிக்கப் பட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல், பூமிக்குள் புதைக்கப்படுகின்றன. மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கப்படுகிறது.

தினமும் 100 டன் உரம் உற்பத்தியாகிறது. கடந்த 3 மாதங்களாக உர உற்பத்தி சோதனை ஓட்ட நிலையில் இருந்தது. நேற்று உரம் உற்பத்தி துவங்கியது. மாநகராட்சி ஆணையர் நந்தகோபால் தலைமையில் மேயர் ராஜன்செல்லப்பா துவக்கி வைத்தார்.

இதுபற்றி மேயர் கூறுகை யில், மாநகராட்சி குப்பை கிடங்கு நவீனமயமாக்கப்பட்டு குப்பையில் இருந்து உரம் தயாரிப்பு தொடங்கி விட்டதால், இனிமேல் குப்பை கிடங்கில் இருந்து புகை வெளியேறுவது தடுக்கப்படும். சுற்றுச் சூழல் மாசுபடாமல் தடுக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் நகர பொறியாளர் மதுரம், செயற்பொறியாளர் ராஜேந்திரன், திடக்கழிவு மேலாண்மை திட்ட தலைவர் பங்கஜ்ஜெயின், உதவி பொறியாளர் சேவியர் பங்கேற்றனர்.

 

மக்கும் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க...பரிசீலனை!"பயோ மெத்தனேசன் பிளான்ட்' அமைக்க திட்டம்

Print PDF
தினமலர்          02.04.2013

மக்கும் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க...பரிசீலனை!"பயோ மெத்தனேசன் பிளான்ட்' அமைக்க திட்டம்


திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சியில் சேகரமாகும் எளிதில் மக்கும் தன்மை கொண்ட குப்பையில் இருந்து எரிவாயு தயாரித்து, அதன் மூலமாக உற்பத்தியாகும் மின்சாரத்தை, தெருவிளக்குகளுக்கு பயன்படுத்தும் திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.திருப்பூர் மாநகராட்சியில் தினமும் 550 மெட்ரிக் டன் அளவுக்கு திடக்கழிவுகள் உருவாகின்றன. அவற்றில், 450 முதல் 500 டன் வரையிலான கழிவுகள் தினமும் சேகரிக்கப்படுகின்றன.

சேகரமாகும் குப்பை, வெள்ளியங்காடு பாறைக்குழியிலும், வேலம்பாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழிகளிலும் கொட்டப்பட்டு வருகின்றன. கோவில்வழியில் செயல்பட்டு வந்த உரக்கிடங்கு, கோர்ட் வழக்கு காரணமாக மூடப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், பாறைக்குழிகளில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.இந்நிலையில், அனைத்து மாநகராட்சிகளிலும், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரித்து பயன்படுத்த வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, நகராட்சி நிர்வாக ஆணையரகம், திருப்பூர் மாநகராட்சிக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், சேகரமாகும் திடக்கழிவுகளில், எளிதில் மக்கும் தன்மை கொண்ட குப்பையில் இருந்து எரிவாயு மின்சாரம் தயாரித்து, தெருவிளக்குகளுக்கு பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.தினசரி மார்க்கெட், தென்னம்பாளையம் சந்தைப்பேட்டை, ஆடுவதைக்கூடம் மற்றும் மீன் மார்க்கெட் பகுதிகளில் இருந்து தினமும் 30 டன் அளவுக்கு மக்கும் குப்பைகள் கிடைக்கின்றன.

எனவே, முதல்கட்டமாக, மக்கும் குப்பைகளில் இருந்து எரிவாயு தயாரித்து, அதன் மூலமாக கிடைக்கும் மின்சாரத்தை தெருவிளக்குகளுக்கு பயன்படுத்த 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.கமிஷனர் செல்வராஜ் கூறியதாவது:மாநகராட்சி பகுதியில் இருந்து தினமும் 30 டன் அளவுக்கு மக்கும் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. சந்தைப்பேட்டை வளாகத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான "பிளான்ட்' அமைக்க போதிய இட வசதி உள்ளது.

முதல்கட்டமாக, ஐந்து மெட்ரிக் டன் அளவுள்ள குப்பையை கொண்டு, மீத்தேன் வாயுவை உருவாக்கி, அதிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்து தெருவிளக்குகளுக்கு பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆடுவதைக் கூடம் அருகிலேயே "பயோ மெத்தனேசன் பிளான்ட்' அமைக்கவும்

உத்தேசிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்துக்காக, உத்தேசமாக, 90 லட்சம் ரூபாய் மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நிதியில் இருந்தும், பொதுமக்கள் பங்களிப்பு மூலமாகவும் இத்திட்டம் செயல்படுத்தப்படும், என்றார்.
 

ரூ.90 லட்சத்தில் புதிய மின் உற்பத்தி நிலையம்: நகராட்சி சேர்மன் தகவல்

Print PDF
தினமலர்                     30.03.2013

ரூ.90 லட்சத்தில் புதிய மின் உற்பத்தி நிலையம்: நகராட்சி சேர்மன் தகவல்


பள்ளிபாளையம்: ""நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு, 90 லட்சம் ரூபாய் மதிப்பில், 440 யூனிட் மின் உற்பத்தி நிலையம், விரைவில் அமைக்கப்படும்,'' என, கவுன்சில் கூட்டத்தில், நகராட்சி சேர்மன் வெள்ளியங்கிரி பேசினார்.

பள்ளிபாளையம் நகராட்சி கவுன்சில் கூட்டம், அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. சேர்மன் வெள்ளியங்கிரி தலைமை வகித்தார். துணைத்தலைவர் சுப்ரமணி, கமிஷனர் முத்து வெங்கடேஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் பின்வருமாறு:

பாலமுருகன் (தி.மு.க.,): எனது வார்டில், குடிநீர் பிரச்னை அதிகமாக உள்ளது. அதனால், மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். குடிநீர் பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும்.

வெள்ளியங்கிரி (சேர்மன்): ஓடப்பள்ளி தடுப்பணையில், குடிநீர் தேவைக்காக மூன்று மீட்டர் அளவுக்கு தண்ணீர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால், குடிநீர் பற்றாக்குறை தவிர்க்கப்படும். நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், ஆழ்துளை குழாய் கிணறுகளில் தண்ணீர் தேவையான அளவு கிடைக்கும்.

சுப்ரமணி (துணைத் தலைவர்): கோடை காலத்தை கருத்தில் கொண்டு, நகராட்சி முழுவதும் தேவைப்படும் இடங்களில், ஆழ்துளை குழாய் கிணறு அமைக்கப்படும்.

செல்வம் (சுயே.,): காவிரி ஆற்றில் சாயக்கழிவுநீர் கலப்பதால், துர்நாற்றம் வீசுகிறது. அதனால், அந்த தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை.

துணைத் தலைவர்: சாயப்பட்டறை கழிவுநீரை ஆற்றில் வெளியேற்றும் சாயப்பட்டறைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாவட்ட கலெக்டர், மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூலமும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும்.

சேர்மன்: தினமும் ஐந்து டன் குப்பைக்கழிவு பொருட்கள் கொண்டு, 440 யூனிட் மின் உற்பத்தி செய்ய, 90 லட்சம் ரூபாய் மதிப்பில் துணை மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும். அதற்கான பணி, விரைவில் துவங்கப்படும். இதுபோன்ற மின் உற்பத்தி நிலையம், தமிழகத்தில், இரண்டாவதாக, இங்கு அமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு விவாதம் நடந்தது.
 


Page 31 of 66