Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

திடக்கழிவு மேலாண்மை: அதிகாரிகள் குழு ஆய்வு

Print PDF
தினமணி         29.03.2013

திடக்கழிவு மேலாண்மை: அதிகாரிகள் குழு ஆய்வு


வேட்டவலம் பேரூராட்சியில் செயல்படுத்தப்படும், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் செயல்பாடுகளை அதிகாரிகள் குழு பார்வையிட்டு ஆய்வு செய்தது.

மாநில திட்டக்குழு ஆணையத்தின் உயர் மட்டக்குழு திட்ட அலுவலர் செல்வராஜன் தலைமையிலான அதிகாரிகள், வேட்டவலம், அண்ணா நகரில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்ட வளாகத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பேரூராட்சி மூலம் தயாரிக்கப்படும் இயற்கை உரம், மண்புழு உரம், முட்டைத் தூள் உரம், தழை உரம் தயாரிக்கும் முறைகள், மறு சுழற்சி செய்யத்தக்க பிளாஸ்டிக் பொருட்களை பிளாஸ்டிக் உடைப்பு இயந்திரம் மூலம் அறைத்து பிளாஸ்டிக் தார் சாலைக்கு பயன்படுத்துவது போன்ற செயல்பாடுகளை அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.

ஆய்வின்போது, பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
 

பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி மையம் அமைக்க அழைப்பு

Print PDF
தினமலர்         26.03.2013

பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி மையம் அமைக்க அழைப்பு


கரூர்: பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி மையங்கள் அமைக்க, மகளிர் சுயஉதவிக்குழுக்கள் விண்ணப்பிக்கலாம், என கலெக்டர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:

கரூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை காப்பதற்காக, பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து, பிளாஸ்டிக் தார் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறன. பல்வேறு மாவட்டங்களில் மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் பிளாஸ்டிக் மறுசுழற்சி மையங்கள் அமைக்கப்பட்டு, வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

அதன் அடிப்படையில், கரூர் மாவட்ட மகளிர் சுயஉதவி குழுக்களின் கூட்டமைப்பு மூலம், பிளாஸ்டிக் மறுசுழற்சி மையம் அமைக்க தேவையான உதவிகள் செய்யப்படுகிறது. விருப்பமுள்ள கூட்டமைப்புகள் மகளிர் திட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
 

குப்பையின் அளவுக்கு ஏற்ப தொட்டிகள் வைக்க முடிவு

Print PDF
தினமணி          24.03.2013

குப்பையின் அளவுக்கு ஏற்ப தொட்டிகள் வைக்க முடிவு


கோவை மாநகராட்சிப் பகுதியில் ஒவ்வொரு வார்டிலும் குப்பையின் அளவைக் கணக்கெடுத்து அதற்கேற்றவாறு குப்பைத் தொட்டிகளை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிப் பகுதியில் தினமும் சுமார் 850 டன் குப்பைகள் சேருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனாலும் பல பகுதிகளில் குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிகின்றன.

மேலும், குப்பைத் தொட்டிகளில் கட்டட இடிபாடுகளும் கொட்டப்படுகின்றன. இதனால் குப்பையின் அளவை மட்டும் நிர்ணயிக்க முடியவில்லை. இந்தப் பிரச்னையைத் தீர்க்க மத்திய மண்டலத்தின் ஒருசில வார்டுகளில் மட்டும் தினமும் சேரும் குப்பையின் அளவைக் கண்டறிந்து, அதற்கேற்ப தொட்டிகளை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையாளர் க.லதா கூறியது: கோவை மாநகராட்சிப் பகுதியில் இப்போது 1500க்கும் மேற்பட்ட குப்பைத் தொட்டிகள் உள்ளன. இவற்றில் அரை முதல் 5 டன் குப்பைகள் வரை கொட்டப்படுகின்றன.

மத்திய மண்டலத்தில் ஒருசில வார்டுகளில் குப்பைகளைக் கணக்கெடுத்து நகரம் முழுவதும் அதற்கேற்ப குப்பைத் தொட்டிகள் வைக்கப்படும் என்றார்.

குப்பைத் தொட்டிகளிலும், குளக்கரைகளிலும் கட்டட இடிபாடுகள் கொட்டப்படுகின்றன. விரைவில் கட்டட ஒப்பந்ததாரர்கள், சிவில் என்ஜினீயர்களை அழைத்து கூட்டம் நடத்தப்பட உள்ளது. கட்டட இடிபாடுகளைக் கொட்டுவதற்கென்று ஒவ்வொரு பகுதியிலும் தனியாக இடம் ஒதுக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
 


Page 32 of 66