Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

புனேயில் செயல்படுத்துவதை போன்று நெல்லையில் திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் மாநகராட்சி மேயர் விஜிலா சத்யானந்த் பேட்டி

Print PDF
தினத்தந்தி          24.03.2013

புனேயில் செயல்படுத்துவதை போன்று நெல்லையில் திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் மாநகராட்சி மேயர் விஜிலா சத்யானந்த் பேட்டி


புனே மாநகராட்சி செயல்படுத்துவதை போன்று நெல்லை மாநகராட்சியிலும் திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று மேயர் விஜிலா சத்யானந்த் தெரிவித்துள்ளார்.

மும்பையில் கருத்தரங்கு

நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள நடைபாதை வியாபாரிகளின் நலன்களை காப்பதற்காக மத்திய அரசு புதிய கொள்கை வகுக்க திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான தேசிய அளவிலான கருத்தரங்கு மும்பை தேவ்னாரில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சமூக அறிவியல் கல்வி வளாகத்தில் கடந்த 22 மற்றும் 23–ந் தேதிகளில் நடந்தது.அதில் தமிழ்நாடு, மராட்டியம், மேற்கு வங்காளம் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு சார்பில் நெல்லை மாநகராட்சி மேயர் விஜிலா சத்யானந்த், துணை மேயர் ஜெகநாதன், சுகாதாரத்துறை தலைமை அதிகாரி டாக்டர். முனீஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நெல்லை மேயர் பேட்டி

கருத்தரங்கில் பங்கேற்ற நெல்லை மாநகராட்சி மேயர் விஜிலா சத்யானந்த் அளித்த பேட்டியில் கூறியதாவது:–

உரிமையுடன் வியாபாரம் செய்யலாம்

நெல்லையை பொருத்தமட்டில் நெல்லையப்பர் சுவாமி கோவிலை சுற்றியுள்ள 4 மாட வீதிகளிலும் நடைபாதை வியாபாரிகள் அதிகம் உள்ளனர். இவர்கள் வியாபாரம் செய்வதற்கு ரவுடிகள், போலீஸ் அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டியுள்ளது. சுமுக போக்குவரத்திற்காக நடைபாதை வியாபாரிகளுக்கு அனைத்து வசதிகளையும் நாங்கள் செய்து கொடுக்க உள்ளோம்.இதன்மூலம் அவர்கள் எந்தவித பிரச்சினையுமின்றி வியாபாரம் செய்யலாம். மாநகராட்சிக்கு மட்டும் வரியாக குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும். நடைபாதை வியாபாரிகள் உரிமையுடன் வியாபாரம் செய்வதன் மூலம் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் மாநகராட்சிக்கு வருவாய் ஈட்டுவதே எங்களுடைய இலக்கு.

மின்சாரம் தயாரிக்கும் திட்டம்

புனே மாநகராட்சி சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்ப திட்டத்தை நாங்கள் பார்வையிட்டோம். நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட எல்லையில் நாள் ஒன்றுக்கு 150 மெட்ரிக் டன் குப்பை கழிவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் ராமையம்பட்டி குப்பை கிடங்கில் சேகரிக்கப்படுகிறது.எனவே திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை நாங்கள் நெல்லையிலும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கான திட்டத்தை தமிழக முதல்– அமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளார். ஒருநாளுக்கு 5 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு உத்தேசமாக திட்டமிடப்பட்டுள்ளது.நெல்லை மாநகராட்சி தற்போது மின்சார கட்டணமாக மாதத்திற்கு ரூ.60 லட்சம் தொகை செலவிடுகிறது. திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் பயன்பாட்டிற்கு வந்தால் மின்சார செலவு சரி பாதியாக குறையும். மின்சார தேவையை நிறைவேற்றுவதில் இத்திட்டம் உதவிக்கரமான இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாநகராட்சி துணை மேயர் ஜெகநாதன் உடன் இருந்தார்.

மையத்தை பார்வையிட்டனர்

முன்னதாக நெல்லை மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரி அடங்கிய குழுவினர், புனே மாநகராட்சியின் கீழ் செயல்படும் திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இதேபோன்று மும்பை மாநகராட்சி சாலையோர வியாபாரிகளை கட்டுப்படுத்தி, எப்படி சுமுக போக்குவரத்திற்கு வழி செய்கிறது என்பதையும் ஆய்வு செய்தனர். நெல்லை மாநகராட்சி குழுவினர் மராட்டிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (திங்கட்கிழமை) நெல்லைக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
 

துப்புரவு பணிகளுக்கு புதிய வாகனங்கள்

Print PDF
தினமணி           22.03.2013

துப்புரவு பணிகளுக்கு புதிய வாகனங்கள்


ராசிபுரம் நகரில் உள்ள 28 வார்டுகளிலும் குப்பைகளைச் சேகரிக்க துப்புரவுப் பணியாளர்கள் பயன்பாட்டிற்கு 40 புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.  இதனை ராசிபுரம் நகர்மன்றத் தலைவர் எம்.பாலசுப்பிரமணியம் துப்புரவு பணியாளர்களிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தார். ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.8.19 லட்சம் மதிப்பில் தலா 4 பெட்டிகள் அடங்கிய 40 குப்பை சேகரிக்கும் வாகனங்களை புதியதாக வாங்க நகர்மன்றம் முடிவு செய்தது.  மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்து சேகரிக்கும் வகையில் ஒவ்வொரு வாகனத்திலும் 4 பெட்டிகளுடன் கூடிய இந்த வாகனங்களை நகர்மன்றத் தலைவர் எம்.பாலசுப்பிரமணியம் துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைத்தார்.

இதற்கான நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் கே.கிருஷ்ணமூர்த்தி, நகர்மன்ற துணைத் தலைவர் எஸ்.வெங்கடாசலம், உதவிப் பொறியாளர் கே.செல்வம், துப்புரவு ஆய்வாளர் கே.பிரகாஷ், நகர்மன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.கந்தசாமி, ஆர்.பி. சீனிவாசன், மணி, ஏ.பி. அருணாசலம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

குப்பை அகற்றும் பணியை தனியாருக்கு விடுவதற்கான ஆலோசனைக் கூட்டம்

Print PDF
தினகரன்                    21.03.2013

குப்பை அகற்றும் பணியை தனியாருக்கு விடுவதற்கான ஆலோசனைக் கூட்டம்


திருப்பூர்: குப்பை அகற்றும் பணியை தனியாருக்கு விடுவதற்கான ஆலோசனைக் கூட்டம் 3வது மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது.

திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. தினமும் சுமார் 550 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரமாகின்றன. 831 பணியாளர்கள், துப்புரவு பணிகளில் ஈடுபடுகின்றனர். போதிய ஆட்கள் இல்லாததால், ஒவ்வொரு வார்டிலும் குப்பைகள் தேங்கி வருகின்றன. இதன் காரணமாக, மகளிர் சுய உதவிக்குழுவினரை, துப்புரவு பணியில் ஈடுபடுத்த, நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி, 60 வார்டுகளிலும், மகளிர் குழுவினர், துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு நபருக்கு தினக்கூலியாக 170 ரூபாய் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. எத்தனை பேர், எவ்வளவு நாட்கள் வேலை செய்தனர் என அந்தந்த வார்டு சுகாதார ஆய்வாளர் அறிக்கை கொடுத்ததும், சம்பந்தப்பட்ட குழுவுக்கு மாதச்சம்பளம் காசோலையாக வழங்கப்படுகிறது.

ஆனால், பல்வேறு பிரச்னைகளால் ஒவ்வொரு வார்டிலும் குப்பைகள் மலைபோல் தேங்கி, கடும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், மகளிர் குழு வருகை பதிவேட்டில், அனைத்து உறுப்பினர்களும் தினமும் வேலைக்கு வந்ததாகவும், “திறம்பட‘ பணியாற்றியதாகவும், பொய் கணக்கு காட்டி, குழுவை நிர்வகிப்பவர்கள், மக்கள் வரிப் பணத்தை லட்சக்கணக்கில் சுருட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இப்பிரச்னைக்கு தீர்வு காண, மாநகராட்சியில் இரண்டு மற்றும் மூன்றாவது மண்டல பகுதிகளில் குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்பட்டுள்ளது.

இதற்காக மண்டலத் தலைவர்கள், சுகாதாரக்குழுத் தலைவர், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோரிடம், மேயர் விசாலாட்சி, ஆணையாளர் செல்வராஜ் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் 3வது மண்டல அலுவலகத்தில்  மேயர் விசாலாட்சி தலைமையில் நடைப்பெற்றது. ஆணையர் செல்வராஜ், துணை மேயர் குணசேகரன், மண்டலத் தலைவர் டெக்ஸ்வேல் முத்துசாமி மற்றும் 12 கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை பணியை தனியாருக்கு கொடுக்கக் கூடாது. ஏற்கனவே உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இதற்காக கூலியை உயர்த்தித் தர வேண்டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

இதற்கு பதிலளித்து மேயர் விசாலாட்சி பேசுகையில்,  திடக்கழிவு மேலாண்மை பணியை தனியார் மயமாக்குவது என்பது அரசு மேற்கொண்டுள்ள முடிவு என்பதை புரிந்துகொண்டு கவுன்சிலர்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்’ என்றார். இந்நிலையில், 2வது மண்டலத்திற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்திலும் கவுன்சிலர்கள் தனியாருக்கு விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களின் சுய லாபத்திற்காக, குப்¬பை அகற்றும் பணியை தனியாருக்கும் விடுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் ஒரு சில கவுன்சிலர்களின் இச்செயல், அனைத்து கவுன்சிலர்களுக்கும் மக்கள் மத்தியில் கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது’ என்றார்.
Last Updated on Friday, 22 March 2013 09:49
 


Page 33 of 66