Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

சுகாதாரப் பணிக்கு புதிய வாகனங்கள்

Print PDF
தினமணி          09.03.2013

சுகாதாரப் பணிக்கு புதிய வாகனங்கள்


சேலம் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகளுக்காக, ரூ.54 லட்சத்தில் வாங்கப்பட்ட புதிய வாகனங்கள் வெள்ளிக்கிழமை பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டன.

சேலம் மாநகராட்சியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ், திடக் கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகளுக்காக 24 வாகனங்கள் வாங்க ரூ.5.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்படி, முதல் கட்டமாக ரூ.54 லட்சத்தில் இரண்டு எக்ஸ்வேட்டர் வாகனங்கள் வாங்கப்பட்டன.

அந்த வாகனங்களை பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாநகராட்சி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு வாகனங்களின் சாவியை ஓட்டுநர்களிடம் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 65 சுய உதவிக் குழுவினருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.6.50 லட்சத்தையும், ஆனந்தா பாலம், குண்டுபோடும் தெரு பாலம் ஆகியவற்றுக்கு நிலம் வழங்கிய 4 நபர்களுக்கு இழப்பீடு தொகையாக மொத்தம் ரூ.73.24 லட்சத்தையும் அமைச்சர் வழங்கினார்.

மாநகர மேயர் எஸ்.செüண்டப்பன், ஆணையர் எம்.அசோகன், துணை மேயர் எம்.நடேசன், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. எம்.கே.செல்வராஜ் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
 

உதகை நகராட்சியில் ரூ.5.5 கோடி செலவில் புதிய சுகாதார திட்டம்

Print PDF
தின மணி            24.02.2013

உதகை நகராட்சியில் ரூ.5.5 கோடி செலவில் புதிய சுகாதார திட்டம்

உதகை நகராட்சியில் சுகாதாரத்தை மேம்படுத்த ரூ.5.5 கோடி செலவில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டு, பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்தின்கீழ் மட்கும் குப்பைகளும், மட்கா குப்பைகளும் தனித்தனியாக பிரிக்கப்படுவதற்கு ஏதுவாக வீடுகள்தோறும் சிவப்பு, பச்சை ஆகிய இரு நிறங்களிலான குப்பைத் தொட்டிகள் விநியோகமும் தொடங்கியுள்ளது.

இந் நிலையில், உதகை நகரின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக ரூ.5.5 கோடி செலவில் புதிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதன்படி, தீட்டுக்கல் பகுதியிலுள்ள நகராட்சி குப்பை சேகரிப்பு மையத்தில் ரூ.3.48 கோடி செலவில் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் பிரிவு தயாராகி வருகிறது. ரூ.1.8 கோடி செலவில் அந்தத் தளத்திலுள்ள குப்பைகளை அள்ளவும், சுத்தம் செய்யவும் தேவையான பொக்லைன்கள், டிப்பர் லாரிகள், ஒரே நேரத்தில் 5 டன் குப்பையை அள்ளக்கூடிய திறன் படைத்த காம்பேக்ட் வாகனம், குறுகிய வீதிகளுக்குள்ளும் சென்று குப்பைகளை சேகரிக்க பிக்-அப் ஆட்டோக்கள் போன்றவை வாங்கப்படுகின்றன.

உதகை நகரில் ஏற்கனவே திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் நகராட்சியிலுள்ள 22 வார்டுகளில் வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. குப்பையை உரமாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தீட்டுக்கல் குப்பை கொட்டும் தளத்திலிருந்து குப்பைகளிலிருந்து உரம் தயாரிக்கும் பணிகள் 3 மாதத்துக்குள் தொடங்குமென உதகை நகர்மன்ற ஆணையர் சிவகுமார், நகர்மன்ற தலைவர் சத்தியபாமா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Last Updated on Tuesday, 26 February 2013 06:56
 

66 குப்பை சேகரிப்பு மையங்கள் விரைவில் செயல்படத் தொடங்கும்: பெங்களூர் மாநகராட்சி ஆணையர்

Print PDF

தினமணி           04.09.2012

 66 குப்பை சேகரிப்பு மையங்கள் விரைவில் செயல்படத் தொடங்கும்: பெங்களூர் மாநகராட்சி ஆணையர்

பெங்களூர், செப்.3: பெங்களூரில் இயங்கிவந்த 66 குப்பை சேகரிப்பு மையங்கள் வெகுவிரைவில் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று, பெங்களூர் மாநகராட்சி ஆணையர் ரஜனீஷ்கோயல் தெரிவித்தார்.

பெங்களூர், யலஹங்கா, பேட்ராயனபுரா சட்டப்பேரவைத் தொகுதிகளை ஆய்வு செய்த பெங்களூர் மாநகராட்சி ஆணையர் ரஜனீஷ்கோயல், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

பெங்களூரில் இயங்கிவந்த 66 குப்பை சேகரிப்பு மையங்களின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை அளிக்கும்படி 8 மண்டலங்களின் துணை ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். யலஹங்கா குப்பை சேகரிப்பு மையம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இது அதிருப்தி அளிக்கிறது.

இயங்காமல் உள்ள இந்த மையத்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு தேவையான நிதி ஒதுக்கப்படும். வீடுகளிலேயே குப்பையை வகைப் பிரிக்கும் வழக்கத்தை எல்லா வார்டுகளிலும் கட்டாயமாக்குவோம்.

அடுக்குமாடி கட்டடங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை உரம் அல்லது மின்சாரம் தயாரிக்க, அங்கேயே வசதி செய்து கொள்ள வேண்டும். இதுகுறித்து அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர்களை சந்தித்துப் பேசுவேன் என்றார்.
 


Page 34 of 66