Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெங்களூரில் குடிநீர் விற்கும் தனியார் லாரிகளுக்கு தடை ? நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க அரசு பரிசீலனை

Print PDF

தினகரன்        25.05.2010

பெங்களூரில் குடிநீர் விற்கும் தனியார் லாரிகளுக்கு தடை ? நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க அரசு பரிசீலனை

பெங¢களூர், மே 25: பெங்களூரில் குடி நீர் விற்பனை செய்யும் தனியார் லாரிகளை தடை செய்வது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திவருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.அசோக் தெரிவித்தார்.

நிருபர்களுக்கு அசோக் நேற்றளித்த பேட்டி:

பெங்களூரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கு தீர்வாக ஒவ்வொரு தொகுதியிலும் அந¢தந்த எம்.எல்.ஏக்கள் தலைமையில் அதிரடிப்படை அமைக்க திட்டமிட்டுள்ளோம். போர்வெல் போடுவது, குடிநீர் சப்ளை லாரிகளை சரியாக உரிய பகுதிக்கு அனுப்பி வைப்பது உள்ளிட்ட பணிகளை இவர்கள் செய்வார்கள். 198 வார்டிலும் வாட்டர் மேன் பணியிடங்கள் நிரப்பப்படும். பெங்களூரில் இருக்கும் போர்வெல்களில் உறிஞ்சும் குடிநீரை, நகருக்குள்ளேயே தனியார் தண்ணீர் லாரிகள் விற்று கொள்ளையடித்து வருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், லாரிகளை தடை செய்வது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறோம்.

குடிநீர் சப்ளை செய்யும் லாரிகள் பெங்களூருக்கு வெளியே உள்ள கிராமங்களில் இருந்து நீரேற்றி வந்தால் அரசு அதற்கு ஆட்சேபனை தெரிவிக்காது. நகருக்குள் தனியார் லாரிகள் குடிநீரை உறிஞ்சுவதால் நிலத்தடி நீர்மட்டம் அதள பாதாளத்திற்கு சென்றுவிடுகிறது. அதே நேரத்தில் லாரிகளில் மாநகராட்சி இலவசமாக குடிநீர் வினியோகம் செய்துவரும் பணி தொடரும்.

கே.எஸ்.ஆர்.டி.சி போக்குவரத்துக் கழகம் நடப்பு நிதியாண்டில் ரூ.49 கோடி லாபம் ஈட்டியுள்ளது. தெலுங்கானா பிரச்னையால் ஆந்திர மாநிலத்திற்கு 3 மாதங்கள் பஸ்கள் இயங்கவில்லை. இதன் விளைவாக, கடந்தாண்டைவிட சுமார் ரூ.3 கோடி லாபம் குறைந்துள்ளது.

பி.எம்.டி.சி நிர்வாகம் நடப்பு நிதியாண்டில் ரூ.65 கோடி லாபம் ஈட்டியுள்ளது. கே.எஸ்.ஆர்.டி.சி புதிதாக பல சக்கர (மல்டி ஆக்சில்) வோல்வோ பஸ்களை இயக்க உள்ளது. ஒரு பஸ்சின் விலை ரூ.85 லட்சமாக இருந்தாலும் பிற வோல்வோக்களைவிட கூடுதலாக 20 இருக்கைகள் இருக்கும் என்பதால், கழகத்திற்கு கூடுதல் லாபம் கிடைக்கும். வெகுதூர இடங்களுக்கு இயக்கப்பட உள்ள இந்த பஸ்சில், வழக்கமான வோல்வோ பஸ் கட்டணமே வசூலிக்கப்படும்.

மங்களூரில் இயக்கப்படும் சிட்டி வோல்வோ பஸ்கள் மூலம், ஒரே மாதத்தில் ரூ.5 லட்சம் லாபம் கிடைத்துள்ளது. பிற நகரங்களிலும் சிட்டி வோல்வோ இயக்கப்படும். அரசு பஸ்கள் மூலம் ஏற்படும் சாலை விபத்துகளை குறைப்பது குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே நமது போக்குவரத்து கழகங்கள்தான மிகக் குறைந்த விபத்து சதவீதத்துடன் இயங்கிவருகின்றன என்பது மகிழ்ச்சிக்குறிய விஷயம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.