Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உத்தமபாளையம் பகுதியில் குடிநீர் சப்ளையில் மாற்றம் : லோயர்கேம்ப்பில் இருந்து நேரடி சப்ளை

Print PDF

தினமலர்       26.05.2010

உத்தமபாளையம் பகுதியில் குடிநீர் சப்ளையில் மாற்றம் : லோயர்கேம்ப்பில் இருந்து நேரடி சப்ளை

கம்பம்: கோடைகாலங்களில் மட்டும் உறைகிணறுகளில் குடிநீர் பம்பிங் செய்வதை நிறுத்த குடிநீர் வடிகால் வாரியம் முடிவு செய்துள்ளது. லோயர்கேம்பில் இருந்து நேரடியாக உத்தமபாளையம் பகுதிக்கு பம்பிங் செய்து சப்ளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

குடிநீர் சரியாக குளோரினேசன் செய்யப்படாததாலும், குடிநீர் மாசுபட்டதாலும் உத்தமபாளையம் பகுதியில் காலரா பாதிப்பு ஏற்பட்டது. இனி வரும் காலங்களில் காலரா பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்து குடிநீர் வாரியத்தின் தலைமை பொறியாளர் தனுஷ் தலைமையிலான குழு ஆலோசனை வழங்கி உள்ளது.உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள கூடலூர், கம்பம், புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, அனுமந்தன் பட்டி, கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் ஆகிய ஊர்களுக்கு லோயர் கேம்பில் இருந்து நேரடியாக சப்ளை செய்ய பகிர்மான குழாய்கள் உள்ளது. கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி, ஓடைப் பட்டி சுற்றுப்புறத்தில் உள்ள கிராமங்களுக்கு மட்டும் நேரடியாக சப்ளை செய்ய வசதி இல்லை. நேரடியா சப்ளை செய்ய பகிர் மான குழாய்கள் உள்ள ஊர்களுக்கு லோயர் கேம்பில் இருந்து சப்ளை செய்யவும், பிற கிராமங்களுக்கு புதிய பகிர்மான குழாய்கள் பதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோடைகாலங்களில் ஆற்றில் அமைக்கப்பட் டுள்ள உறை கிணறுகளில் இருந்து குடிநீர் பம்பிங் செய்யாமல் இருக்க முடிவு செய்யப்பட் டுள்ளது. ஆற்றில் அதிக தண்ணீர் வரும் போது மட்டும், உறை கிணற்றில் பம்பிங் செய்து சப்ளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.