Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுத்தமாகிறது மாநகராட்சி நீர்தேக்கத் தொட்டிகள்

Print PDF

தினமணி        26.05.2010

சுத்தமாகிறது மாநகராட்சி நீர்தேக்கத் தொட்டிகள்

திருப்பூர், மே 25: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நீர்த்தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது.

திருப்பூர் மாநகராட்சி பகுதி மக்களுக்கு நாளொன்றுக்கு சுமார் 490 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. முதல், 2வது மற்றும் 3வது கூட்டுக் குடிநீர் திட்டங் கள் மூலம் திருப்பூருக்கு கொண்டு வரப்படும் குடிநீரை தடையின்றி விநியோகிக்க 8 மேல்நிலைத் தொட்டிகள், ஒரு நிலமட்டத் தொட்டி மற்றும் 9 நிலமட்ட சேமிப்புத் தொட்டிகளை மாநகராட்சி நிர்வகித்து வருகிறது.

இந்நிலையில், பருவமழை துவங்க உள்ளதை முன்னிட்டு உள்ளாட்சி அமைப்புகள் நிர்வகிக்கும் குடிநீர்த் தொட்டிகள், நீர்த்தேக்கம், வடிகட்டும் பகுதிகளை மே 31-ம் தேதிக்குள் சுத்தம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருப்பூர் மாநகராட்சி பகுதியிலுள்ள நீர்தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது.

மேலும், பருவமழைக் காலங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் விநி யோகிக்கப்படும் குடிநீரை பொதுமக்கள் காய்ச்சிப் பருக வேண்டும். மாநகராட்சி பகுதிகளிலுள்ள நீர்தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறுவதையொட்டி குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி அறிவுறுத்தியுள்ளார்.