Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

செம்பூரில் மேலும் 2 தண்ணீர் குழாய்களில் உடைப்பு

Print PDF

தினகரன்   31.05.2010

செம்பூரில் மேலும் 2 தண்ணீர் குழாய்களில் உடைப்பு

செம்பூர், மே 31: குடிநீர் வெட்டு காரணமாக மும்பை மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்படும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து கொண் டிருக்கின்றன.

மோனோ ரயில் திட்டப் பணிகளை மேற்கொண்டு வரும் காண்டிராக்டரின் அஜாக்கிரதை காரணமாக செம்பூரில் மேலும் இரண்டு குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டது. செம்பூர் ஆர்.சி. மார்க்கில் 30 அங்குல குழாய் ஒன் றிலும் ஆச்சார்யா மார்க¢ பகுதியில் 12 அங்குல குழாயிலும் உடைப்பு ஏற்பட்டது. இந்த உடைப்புகள் காரணமாக சிந்தி காலனி மற்றும் பி.பி.சி.எல்., எச்.பி.சி.எல்., மற்றும் டாடா பவர் கம்பெனி ஆகியவற்றுக் கான குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த உடைப்புக்கு காரணமான காண்டிராக்டருக்கு எதிராக செம்பூர் காவல் நிலையத்தில் எஃப்..ஆர். பதிவு செய்ய மாநகராட்சி முடிவு செய் துள்ளது.

மோனோ ரயில் காண் டிராக்டரின் அஜாக் கிரதை காரணமாக குடி நீர் குழாயில் உடைப்பு ஏற்படுவது கடந்த ஒரு வாரத்தில் இது இரண் டாவது சம்பவம் ஆகும். கடந்த வார துவக்கத்தில் செம்பூரில் 24 அங்குல குடிநீர் குழாய் ஒன்றில் சேதம் ஏற் பட்டது.

கடந்த மழைக்காலத்தில் போதிய மழை பெய்யாத தால் மும்பையில் 15 சதவீத குடிநீர் வெட்டு அமலில் உள்ளது. இந்த நிலையில் குடிநீர் குழாய் களிலும் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் மக்களின் சிரமம் மேலும் அதிகரித்து இருக்கிறது.

கடந்த ஜனவரியில் நானா சவுக் பகுதியில் ஒரு குடிநீர் குழாய் உடைந்ததால் சுமார் 5 மில்லியன் லிட்டர் தண்ணீர் வீணானது. மகாராஷ்டிரா மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் காண்டிராக்டர் ஒருவர் செய்த தவறால் இந்த சம்பவம் நடந்தது.

கடந்த மே மாதம் லால்பாக் மேம்பாலம் கட்டும் பணியின்போது அப்பகுதியில் உள்ள குடிநீர் குழாய் உடைந்தது. இந்த உடைப்பை பழுது பார்த்த செலவுக்காக மும்பை பெருநகர வளர்ச்சி வாரியத்துக்கு (எம்.எம்.ஆர்.டி..) மாநகராட்சி ரூ.13 லட்சத்துக்கு பில் அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.