Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவை நகரில் இனி 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்! மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

Print PDF

தினமலர்     01.06.2010

கோவை நகரில் இனி 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்! மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை : செம்மொழி மாநாட்டின்போது நகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் சமாளிக்க தெற்கு மற்றும் மேற்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் நான்கு நாட்களுக்கொரு முறை குடிநீர் வினியோகிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கோவை மாநகராட்சிக்கு சிறுவாணி அணையிலிருந்து நாளொன்றுக்கு 6 கோடி 40 லட்சம் லி., குடிநீரை நகர மக்கள் பயன்பாட்டுக்காக தமிழ்நாடு வடிகால் வாரியத்திடமிருந்து பெறுகிறது. பெறும் குடிநீரை தெற்கு மற்றும் மேற்கு மண்டலத்துக்குட்பட்ட 36 வார்டு பகுதிகளுக்கு வினியோகம் செய்து வந்தது. பில்லூர் குடிநீர் குழாயில் ஏற்படும் உடைப்பு மற்றும் பழுது காரணமாக கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட பெரும்பாலான வார்டுகள் மற்றும் வடக்கு மண்டலத்துக்குட்பட்ட 1, 2, 3 ஆகிய வார்டுகளில் எப்போதும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வந்தது. இதை சமாளிக்க, மாநகராட்சி தெற்கு, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளிலில் வினியோகிக்கும் குடிநீரை குறைத்துக்கொண்டு, கிழக்கு மற்றும் வடக்கு மண்டல வார்டு பகுதிகளுக்கு சிறுவாணி குடிநீரை பகிர்ந்து கொடுக்க முடிவு செய்யட்டது. அதற்கான தீர்மானம், மாநகராட்சி மன்றத்தில் நிறைவேறியது.

அதன் படி, சிறுவாணி அணையிலிருந்து பெறப்படும் குடிநீரில் 60 சதவீதம் இரு மண்டலப்பகுதிகளுக்கும் பயன்படுத்திக்கொண்டு மீதமுள்ள 40 சதவீதம் லிட்டரை கிழக்கு மற்றும் வடக்கு மண்டலப்பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டது. தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், செம்மொழி மாநாட்டையொட்டி மாநகரிலுள்ள எந்த ஒரு வார்டு பகுதியிலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு விடக்கூடாது. குடத்தை தூக்கிக்கொண்டு பெண்கள் மறியலில் இறங்கக்கூடாது என்பதால் மாநகராட்சி நிர்வாகம் தெற்கு மற்றும் மேற்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் "இனி ஒரு மாதம் வரை நான்கு நாட்களுக்கொருமுறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படும்' என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வார்டுக்குரிய பிளம்பர் மற்றும் கவுன்சிலர்கள் வார்டு மக்களிடம் கூறியுள்ளனர். நான்கு நாட்களுக்கொருமுறையே குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் போதுமான குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள், தேவையான அளவு குடிநீரை சேகரம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். சிறுவாணி அணையில் குறைந்த அளவே தண்ணீர் இருப்பதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது' என்று வார்டு வாரியாக பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியீடு செய்துவருகின்றனர்.

இது குறித்து மாநகராட்சி இன்ஜினியர் கூறியதாவது: சிறுவாணி அணையின் நீர் மட்டம் குறைந்து வருகிறது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம் தெற்கு, மேற்கு மண்டலங்களில் செய்யப்பட்டு வந்தது. அணையில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கவும், செம்மொழி மாநாட்டுக்கு போதுமான சிறுவாணி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டியிருப்பதாலும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வினியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நான்கு நாட்களுக்கொருமுறை வினியோகம் செய்யப்படும்.பில்லூர் குடிநீர் வினியோகம் செய்யப்படும் வடக்கு மற்றும் கிழக்கு மண்டலப்பகுதிகளில் வழக்கம் போல் நான்கு நாட்களுக்கொருமுறையே குடிநீர் வினியோகம் செய்யப்படும்;அதில் மாற்றம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார