Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நாகர்கோவில் குடிநீர் பிரச்னையை தீர்க்க கூட்டு குடிநீர் திட்டம்

Print PDF

தினகரன் 01.06.2010

நாகர்கோவில் குடிநீர் பிரச்னையை தீர்க்க கூட்டு குடிநீர் திட்டம்

நாகர்கோவில், ஜூன் 1: நாகர்கோவில் நகராட்சிக்கு தினமும் 190 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. 1945ம் ஆண்டு அமைக்கப்பட்ட முக்கடல் அணை தண்ணீர் போதுமானதாக இல்லை. எனவே அனந்தனாறு சானல் மூலம் பேச்சிப்பாறை அணைத்தண் ணீ ரே விநியோகிக்கப்பட்டு வருகிறது. கோடையில் அடைக்கப்பட்டு விடுவதால் ஏப்ரல், மே மாதங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பாடுவது வாடிக்கையாகி விட்டது. இதற்காக உலக்கை அருவி திட்டம், புத்தேரி பெரியகுளத்தில் ராட்சத கிணறு அமைக்கும் திட்டங்கள் தீட்டப்பட்டன.

இந்நிலையில் இத்திட்ட த்திற்கான நிதி செலவு மற்றும் நீர்வீழ்ச்சி பகுதிக்கும் அணைக்கட்ட திட்டமிட்ட பகுதிக் கும் இடையே அரை கி.மீட் டர் தூரமே உள்ளது என்பது போன்ற காரணங் களை சுட்டிகாட்டி அதிகாரிகள் சிலர் முட்டுகட்டை போட்டுள்ளனர். புத்தேரி பெரியகுளம் திட்டமும் சாத்தியமில்லை என்று கைவிடப்பட்டது.

இந்நிலையில் அகஸ்தீஸ்வரம், நாகர்கோவில் மற்றும் குளச்சல் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கு குழித்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றிலிருந்து கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் குளச்சல் தொகுதிக்கான திட்டத்தில் நாகர்கோவில் நகராட்சிக்கும் குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள் ளது. இத்திட்டத்திற்காக நாகர்கோவில் புளியடி பகுதி யில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 2 ஏக்கர் நிலத்தை நகராட்சி வழங்க வேண்டும். திட்ட ஆய்வுப்பணிக்கு ரூ.50 லட்சம் ஒதுக்க வேண்டும். இத்திட்டப்படி குளச்சல் தொகுதிக்கு 100 லட்சம் லிட்டர் குடிநீரும் நாகர்கோவிலுக்கு 200 லட்சம் லிட்டர் குடிநீரும் வழங்கப்படும். எனவே திட்ட செலவில் 3ல் 2 பங்கை நகராட்சி ஏற்க வேண் டும். 1000 லிட்டருக்கு ரூ4.50 நகராட்சி செலுத்தவேண்டும். இந்த நிபந்தனைகளை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் விதித்துள்ளனர்.

நேற்று நடைபெற்ற நகராட்சி கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டது. ஏற்கனவே உலக்கைஅருவி திட்டமும், அதற்கு ஒதுக்கிய பணத்திற்கும் சரியான நடவடிக்கை இல்லை எனக்கூறி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு சேர்மன் அசோகன் சாலமன்கூறுகையில் இத்திட்டம் அவசியம் தேவை. ஆனால் நிபந்தனைகளில் பல மாறுதல்கள் தேவைப்படுகிறது. இத்திட்டம் சாத்தியப்படுமா என்ற ஆய்வு மற்றும் உத்தேச மதிப்பீடு போன்றவற்றை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கவேண்டும் என்றார்.