Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.50 லட்சம் மதிப்பில் ஆழ்துளை குழாய் கிணறு

Print PDF

தினமலர் 02.06.2010

ரூ.50 லட்சம் மதிப்பில் ஆழ்துளை குழாய் கிணறு

நாமக்கல்: நகராட்சியில் தண்ணீர் பிரச்னையை தீர்க்க, 50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆழ் குழாய் கிணறு அமைப்பதற்கு கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. நாமக்கல் நகராட்சி கவுன்சில் கூட்டம் சேர்மன் செல்வராஜ் தலைமையில், நடந்தது. துணைத்தலைவர் பூபதி முன்னிலை வகித்தார். நகராட்சி 7வது வார்டு பாவடி தெருவில் அமைக்கப்பட்டுள்ள ஆழ் குழாய் கிணற்றில் நீர் குறைந்ததால், 3.85 லட்சம் ரூபாய் மதிப்பில், சேந்தமங்கலம் பிரதான சாலையில் ஆழ் குழாய் கிணறு அமைக்க மன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. மேலும், நகராட்சி 6வது வார்டு குட்டைத்தெரு மக்கள் பயன்பாட்டுக்காக 2.75 லட்சம் ரூபாய் மதிப்பில் தண்ணீர் வசதி ஏற்படுத்தவும், 2வது வார்டு ஆர்.பி.புதூர் காலனி மற்றும் ஜேக் அண்டு ஜில் பள்ளி தெருவில், 4.25 லட்சம் ரூபாய் மதிப்பில் தண்ணீர் குழாய் நீட்டித்தல் பணிக்கும், 13வது வார்டு பேட்டை காலனி, நடராஜபுரம் 4வது தெரு பகுதிகளுக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் விநியோக குழாய் பதித்தல் பணிக்கும் ஒப்புதல் பெறப்பட்டது.

வார்டு 18ல் டாக்டர் சங்கரன் சாலை, வார்டு 9ல் வெள்ளவாரி மேலத்தெரு ஆகியவற்றில் ஏற்கனவே உள்ள ஆழ் குழாய் கிணற்றில் தலா 2 லட்சம் ரூபாய் மதிப்பில், நீர்மூழ்கி மோட்டார் அமைத்து ஹெச்.டி.பி.., தண்ணீர் தொட்டி அமைக்கவும், வார்டு 4ல் பொன் கைலாஷ் கார்டன்ஸ் பகுதியில் 2.75 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக ஆழ் குழாய் கிணறு அமைத்து குட்டை தெரு, மேலத்தெரு பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. 2வது வார்டு குடியிருப்பு பகுதியில் நகராட்சி பூங்கா பகுதியில் மக்கள் பயன்பெறும் வகையில் 4.50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆழ் குழாய் கிணறு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தண்ணீர் விநியோகம் செய்யவும், அன்பு நகரில் 4.50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ஆழ் குழாய் கிணறு அமைக்கவும் மன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. முல்லைநகர் மற்றும் திருநகர் பகுதியில் மேல்நிலைத்தொட்டி வளாகத்தில் 12.60 லட்சம் ரூபாய் மதிப்பிலும், நகராட்சி அலுவலகம், பதிநகர் மற்றும் காவேரி நகர் பகுதியில் உள்ள சம்பு மற்றும் மேல்நிலைத்தொட்டி வளாகத்தில் 16.30 லட்சம் ரூபாய் மதிப்பிலும் சுற்று சுவர் மற்றும் காவலர் அறை கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.