Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னைக்கு குடிநீர் தரும் ஸ்ரீசைலம் அணை வேகமாக நிரம்புகிறது

Print PDF

மாலை மலர் 28.07.2009

சென்னைக்கு குடிநீர் தரும் ஸ்ரீசைலம் அணை வேகமாக நிரம்புகிறது

ஜூலை. 28-

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதில் கிருஷ்ணா தண்ணீருக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த தண்ணீர் ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் இருந்து கண்ட லேறு அணைக்கு கொண்டு செல்லப்படும். பின்னர் அங்கிருந்து ஜீரோபாயிண்ட் வழியாக புழல் ஏரியை வந்தடையும்.

கடந்த மாதம் ஸ்ரீசைலம் அணை தண்ணீர் இல்லாமல் வறண்டு போனது. இதனால் ஆந்திராவில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில் கர்நாடகம், மராட்டியத்தில் கிருஷ்ணா, துங்கபத்ரா நதிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 வார காலமாக நல்ல மழை பெய்து வருகிறது. எனவே ஸ்ரீசலைம் அணைக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரித்தது. இதனால் ஸ்ரீசலைம் அணை வேகமாக நிரம்புகிறது.

தற்போது அணை நீர்மட்டம் 840 அடியை தாண்டி விட்டது. தற்போது அணையில் தற்போது 96.7672 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் ஸ்ரீசைலம் அணை ஓரிரு வாரத்தில் நிரம்பி விடும் என்று ஆந்திர நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் கூறினார்கள்.