Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருநகரில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்: கமிஷனரிடம் பொதுமக்கள் பரபரப்பு புகார்

Print PDF

தினமலர் 02.06.2010

திருநகரில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்: கமிஷனரிடம் பொதுமக்கள் பரபரப்பு புகார்

திருநெல்வேலி:திருநகரில் 15 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வருவதாக பொதுமக்கள் மாநகராட்சி கமிஷனரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.திருநகர் நலச்சங்க செயலாளர் ராமையா, மாநகராட்சி கமிஷனரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மேலப்பாளையம் மண்டலத்தில் 27வது வார்டு திருநகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் கிடைக்கிறது. இதனால் மக்கள் குடிநீருக்காக அவதிப்படுகின்றனர். குடிநீருக்காக வெகுதூரம் அலையவேண்டியுள்ளது. எனவே மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்திட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

என்.ஜி..நியூ காலனி மக்கள் நலச்சங்கத்தினர் அளித்துள்ள மனுவில், "நீலகண்டநகர், ராஜ்நகர் சந்திப்பு பகுதியில் பாலம் வேலை நடைபெறவில்லை. ரோடுகளும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி பணிகளை உடனே துவக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.வண்ணார்பேட்டை இந்திரா காலனி மக்கள் அளித்துள்ள மனுவில், "வண்ணார்பேட்டை 9வது வார்டு இந்திரா காலனியில் சுடலை கோயில் சந்து ஆரம்பத்தில் இருந்து பைபாஸ் ரோடு திருப்பம் வரை உள்ள தெருவில் மழை நேரங்களில் மழை நீர் ரோட்டில் குளம் போல் தேங்கி விடுகிறது. ரோடு உயர்ந்துவிட்டதால் மழை நீர் வீடுகளுக்குள் வருகிறது. மழைநீரில் கொசுக்கள் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்வதற்கு வசதியாக வடிகால் ஓடை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.