Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீரை சேமிக்க விருந்தினர்களுக்கு அரை டம்ளர் தண்ணீர் மட்டுமே கொடுங்கள்

Print PDF

தினகரன் 07.06.2010

குடிநீரை சேமிக்க விருந்தினர்களுக்கு அரை டம்ளர் தண்ணீர் மட்டுமே கொடுங்கள்

மும்பை, ஜூன் 7: மும்பை யில் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் தண்ணீரை மிச்சப்படுத் தவும் குடிநீர் சப்ளையை மேம்படுத்தவும் மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பழைய குடிநீர் குழாய்களை பழுது பார்த்தல், புதிய குழாய் கிணறுகளை தோண்டுதல், கடல்நீர் சுத்திகரிப்பாலை களை அமைத்தல், மழை நீரை சேகரித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.

இந்த நிலையில், உலக சுற்றுச்சூழல் தினத்தை யொட்டி மேயர் ஸ்ரத்தா ஜாதவ் தமது பங்குக்கு தண்ணீரை மிச்சப்படுத்து வதற்கான சில யோசனை களை தெரிவித்தார். விருந்தினர்களுக்கு அரை டம்ளர் தண்ணீர் மட்டுமே கொடுங்கள் என்பதும் அந்த யோசனைகளில் ஒன்று. ஓட்டலுக்கு வருவோர் தங்களுக்கு தேவையான தண்ணீரை மட்டும் ஊற்றிக் கொள்ளும் வகையில் டேபிளில் தண்ணீர் குவளையை வைக்கும் படியும் அவர் வேண்டு கோள் விடுத்தார்.

தண்ணீர் கசியும் குடிநீர் குழாய்களை பழுது பார்த்தல், தண்ணீர் நிரம்பி வழியாமல் இருப்பதற்காக தண்ணீர் தொட்டி நிரம்பு வதற்கு முன்பே மோட்டாரை நிறுத்தி விடுதல், கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துதல் ஆகியவை மேயர் தெரிவித்த பிற யோசனைகள் ஆகும்.

இது சம்மந்தமாக ஸ்ரத்தா ஜாதவ் மேலும் கூறிய தாவது:

தண்ணீரை சேமிப்பதற் காக சச்சின் மூலம் பிரசா ரத்தை தொடங்கி இருக்கி றோம். வேறு பல யோசனை களையும் வைத்துள்ளோம். அவை குறித்து இந்தி, மராத்தி மற்றும் உருது போன்ற பல்வேறு மொழி களில் போஸ்டர்கள் அடித்து பிரசாரம் மேற் கொள்வோம். மும்பையின் புறநகர் பகுதி களில்தான் அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. இப்பிரச்னையில் உதவ இளைஞர்களும் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மும்பையில் பகுதிவாரியாக வாரத்துக்கு ஒருமுறை 100 சதவீதம் குடிநீர் வெட்டு அமல்படுத் தும் மாநகராட்சியின் திட்டத்துக்கு மேயர் அனு மதி அளித்து இருந்தார். இந்த திட்டம் பரீட்சார்த்த அடிப்படையில் அமல் படுத்தப்பட்டது. ஆனால் பொதுமக்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பி யதால் இத்திட்டம் பின்னர் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.