Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ராசிபுரத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ.8.25 கோடி நிதி ஒதுக்கீடு

Print PDF

தினகரன் 07.06.2010

ராசிபுரத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ.8.25 கோடி நிதி ஒதுக்கீடு

ராசிபுரம், ஜூன் 7: ராசிபுரத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ.8.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படும் என நகர்மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராசிபுரம் நகர்மன்ற தலைவர் ராமதாஸ் கூறியிருப்பதாவது: ராசிபுரம் நகராட்சி பகுதி மக்களுக்கு பூலாம்பட்டி காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள பூலாம்பட்டி&ராசிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், இடைப்பாடி நகராட்சி பகுதி மட்டுமின்றி இடங்கணசாலை, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, ஆட்டையாம்பட்டி, வெண்ணந்தூர், அத்தனூர் உள்ளிட்ட வழியோர கிராமங்கள் பயனடைந்து வருகின்றன. இதனால் திட்டத்தின் கடைசி எல்லையான ராசிபுரம் நகராட்சிக்கு போதிய குடிநீர் கிடைக்காத நிலை உள்ளது.

இதை போக்க, ராசிபுரம் நகராட்சி பகுதிக்கு தனி குடிநீர் குழாய் அமைக்கும் திட்ட வரைவு உருவாக்கப்பட்டு அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, காவிரி கூட்டு குடிநீர் திட்டப்பாதையின் இடையில் கண்டர்குலமாணிக்கம் பகுதியில் இருந்து ராசிபுரம் ஏடிசி டெப்போ வரை 18 கிலா மீட்டர் தூரத்திற்கு தனி குழாய் அமைக்க ரூ.8.25 கோடி ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் விரைவில் துவங்கப்படும். ஓராண்டில் பணி கள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதன் மூலம் நகரின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும்.

விரைவில் பணிகள் துவக்கம்

தற்போது, ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் ரூ.58 லட்சத்தில் 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு வருகிறது. இப்பணியும் விரைவில் நிறைவடையும். இவ்வாறு நகர்மன்ற தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்