Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி நடவடிக்கை 12 சிறப்பு குழுக்கள் மூலம் குடிநீர் தரம் தொடர் ஆய்வு

Print PDF

தினகரன் 10.06.2010

மாநகராட்சி நடவடிக்கை 12 சிறப்பு குழுக்கள் மூலம் குடிநீர் தரம் தொடர் ஆய்வு

சென்னை, ஜூன் 10: மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:

மேயர் மா. சுப்பிரமணியன் தலைமையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் நிரஞ்சன் மார்டி முன்னிலையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது.

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் சிவ்தாஸ் மீனா, மாநகராட்சி ஆணையர் ராஜேஷ்லக்கானி, துணை மேயர் ஆர். சத்தியபாமா. மன்ற ஆளுங்கட்சித் தலைவர் நா. ராமலிங்கம், எதிர்கட்சி தலைவர் சைதை ரவி, நிலைக்குழுத் தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பின்வரும் கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டது.

சென்னையில் கழிவு நீர் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்குவதற்காக 11 அடைப்பு நீக்கும் இயந்திரங்கள் (ஜெட் ரோடிங் மெஷின்), 21 து£ர்வாரும் இயந்திரங்கள் (டீசில்டிங் மிஷின்) வாங்கப்பட்டுள்ளன. 25 கழிவு நீர் அடைப்பு நீக்கும் இயந்திரங்களும், 3 விரைவாக உறிஞ்சி து£ர்வாரும் இயந்திரங்களும், 17 து£ர்வாரும் இயந்திரங்கள் என மொத்தம் 45 இயந்திரங்கள் விரைவில் வாங்கப்படவுள்ளது. இப்பணிக்காக 21 கனரக வாகன ஓட்டுநர்கள் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையிலுள்ள 155 வார்டுகளிலும் மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் இணைந்து குடிநீர் தரம் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநீரில் கழிவுநீர் கலப்பது தொடர்பான புகார் பெற்றவுடன், அந்த பகுதியில் பிரதான குழாயின் மூலம் வழங்கப்படும் குடிநீர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, லாரிகள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

மேலும் மேற்பார்வை பொறியாளர்கள் தலைமையில் 12 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு குடிநீர் தரம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 462 முட்டு தெருக்களில் குடிநீர் குழாய்களில் உள்ள கசடு நீக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.