Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

550 வீடுகளுக்கு வைப்புத்தொகை இல்லாமலேயே குடிநீர் இணைப்பு

Print PDF

தினமணி 15.06.2010

550 வீடுகளுக்கு வைப்புத்தொகை இல்லாமலேயே குடிநீர் இணைப்பு

திருப்பூர், ஜூன் 14: குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 550 வீடுகளுக்கு வைப்புத் தொகை இல்லாமலேயே குடிநீர் இணைப்பு வழங்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நகர்ப்புற குடிசைகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் கணக்கெடுப்பு செய்ததில் 27 பகுதிகளில் 2 ஆயிரத்து 60 குடிசைகள் இருப்பது தெரியவந்தது. அந்த வீடுகளை அபிவிருத்தி செய்வதற்காக மத்திய, மாநில அரசுகள் ரூ.36 ஆயிரம் மானியம் வழங்கியுள்ளன. இதுதவிர, ரூ.4 ஆயிரம் பயனாளிகள் சொந்தப் பணத்தைச் செலுத்தி அந்த வீடுகளை அபிவிருத்தி செய்து கொள்ள முடியும்.

இத் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு வைப்புத் தொகை இல்லாம லேயே குடிநீர் இணைப்பு வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ள து. முதற்கட்டமாக, 550 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு இலவசமாக வழங்கும் பணி திங்கள்கிழமை துவக்கப்பட்டது. பூலவாரி சுகுமார் நகரில் நடைபெற்ற இதற்கான விழாவுக்கு மேயர் க.செல்வராஜ் தலைமை வகித்து, குடிநீர் இணைப்பு பணிகளை துவக்கி வைத்தார்.

மாநகராட்சி ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி, பொறியாளர் கௌதமன், குடிநீர் விநியோக பொறியாளர் முருகேசன், உதவி பொறியாளர் கண்ணன், மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து கட்டிமுடிக்கப்படும் வீடுகளுக்கும் உடனுக்குடன் இலவசமாக குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Last Updated on Tuesday, 15 June 2010 07:03