Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பில்லூர் 2&வது குடிநீர் திட்டம் நவீன கண்காணிப்புக்கு ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு

Print PDF

தினகரன் 15.06.2010

பில்லூர் 2&வது குடிநீர் திட்டம் நவீன கண்காணிப்புக்கு ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு

கோவை, ஜூன் 15: கோவை மாநகராட்சி சார்பில், பில்லூர் 2வது குடிநீர் திட்டம் ரூ.128.5 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது. மோட்டார் மூலம் குடிநீர் எடுத்தல், தண்ணீர் சுத்திகரிப்பு, பிர தான குழாய்க்கு வினி யோகம், மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் சேமிப்பு என பல்வேறு பணிகள் இடம்பெற்றுள்ளன. பணி கள் சில இடங்களில் முடியும் நிலை யில் உள்ளது.

பகுதி 2வது திட்டத்தின் கீழ் இத்திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், ‘கண்காணிப்பு கட்டுப்பாட்டு, மற்றும் தகவல் சேகரிப்பு திட்டம்’(ஸ்கேடா) செயல்படுத்தப்படும். அணையில் தினமும் எடுக்கப்படும் குடி நீர் அளவு, குடிநீரில் தாதுப்பொருட்களின் அளவு, மாசு, கழிவாக வெளியேறும் குடிநீர், குடிநீர் பிரதான குழாயில் பாயும் வேகம், குழாயின் தன்மை, நீர் அழுத்தம், நீர் கசிவு, உடைப்பு, நீர் வெளியேற்றம் போன்றவற்றை துல்லியமாக அறியமுடியும். இதற்காக கணபதி நீர் தேக்க தொட்டி வளாகத்தில் கட்டுப்பாட்டு அறை அமையும். திட்டத்தில் உள்ள, 46 கி.மீ தூர பகிர் மான குழாய், கட்டன் மலை, கோம்பை மலையில் உள்ள குகை பாதை போன்றவற் றின் முழு தொகுப்புகளும் இந்த அறையுடன் இணைக்கப்படும்.

அதிக அழுத்தம் காரணமாக குழாய் உடைப்பு ஏற்படுவதை தடுப்பது போன்றவற்றை கட்டுபாட்டு அறையிலுள்ள கம்ப்யூட்டர் மூலம் கட்டுப்படுத்த முடி யும். இதற்காக டெலி மெட்ரி கருவி பொருத்தப்படும். ஏற்கனவே கோவையில் பில்லூர் முதல் குடிநீர் திட்டத்தில் ஸ்கேடா திட்டம் பயன்படுத்தப்படுகிறது.

கோவை மாநகராட்சி மேற்பார்வை பொறியாளர் பூபதி கூறுகையில், " ஸ்கேடா திட்டத்தை அமைக்க விரைவில் டெண்டர் விடப்படும், " என்றார்.