Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புளியங்குடி பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை போக்க ரூ.1 கோடியில் வாழைமலையாறு குடிநீர் திட்டம்

Print PDF

தினமலர் 18.06.2010

புளியங்குடி பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை போக்க ரூ.1 கோடியில் வாழைமலையாறு குடிநீர் திட்டம்

புளியங்குடி : "புளியங்குடி பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை போக்க சுமார் 1 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் வாழைமலையாறு குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்' என நகராட்சி தலைவர் துரையப்பா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது:- புளியங்குடி பகுதியில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து அரசியல் கட்சி ஒன்று ஆர்ப்பாட்டமும், கூட்டமும் நடத்தியது. அதில் என்னையும், வாசுதேவநல்லூர் தொகுதி எம்.எல்..வையும் அவதூறாக பேசியுள்ளனர். நகராட்சி தலைவர் என்ற முறையில் நகராட்சி நிர்வாக முதன்மை செயலாளர் நிரஞ்சன் மார்டியை சந்தித்து அரசு நிதியாக ரூ.50 லட்சமும், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சமும், நகராட்சி பொது நிதியையும் சேர்த்து சுமார் 1 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் வாழைமலையாறு குடிநீர் திட்டத்தை தயார் செய்து விரைவில் நிறைவேற்ற உள்ளோம். மேலும் தெருக்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதில் மின் மோட்டார்கள் பொருத்தி தொட்டிகளில் தண்ணீர் தேக்கி மக்களுக்கு வினியோக்கிப்படுகின்றது. உண்மை இவ்வாறு இருக்க சிலர் உண்மைக்கு புறம்பான செய்திகளை மக்களிடம் பரப்பி வருகின்றனர் என மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.