Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் திட்ட பணிக்கு ரூ. 1 கோடி ஒதுக்கீடு மாவட்ட ஆட்சியர் தகவல்

Print PDF

தினகரன் 21.06.2010

குடிநீர் திட்ட பணிக்கு ரூ. 1 கோடி ஒதுக்கீடு மாவட்ட ஆட்சியர் தகவல்

கடலூர், ஜூன் 21: கடலூர் மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

கடலூர் மாவட்டத்தில் குடிநீர் பணிகளை மேற்கொள்வதற்கு ரூ.1 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள மருதாடு, திருவந்திபுரம், ஆலப்பாக்கம் அம்பேத்கார் நகர், ராஜம் நகர், திருச்சோபுரம், ஆயிபுரம், கீழ்அனுவம்பட்டு, பின்னத்தூர், பாளையங்கோட்டை மேல், மேல்மூங்கிலடி, சி. தண்டேஸ்வரநல்லூர், கூடுவேலி, கொழை, வீராணந்தபுரம், சேப்பளாநத்தம் (தெற்கு), வெண்கரும்பூர்(காலணி), மங்களூர், ஒரங்கூர், கோ.பழவங்குடி ஆகிய 19 ஊராட்சிகளுக்கும் ரூ.50 லட்சமும், சிதம்பரம் நகராட்சிக்கு ரூ.18 லட்சமும் ,ஸ்ரீ முஷ்ணம், காட்டுமன்னார்கோயில், மேல்புவனகிரி, கிள்ளை, குறிஞ்சிப் பாடி, கெங்கை கொண்டான் ஆகிய 6 பேரூராட்சிகளுக்கு ரூ.32 லட்சமும் ஆக மொத் தம் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட கிராம ஊராட்சிகள், பேரூராட்சி கள் மற்றும் நகராட்சிகளில் குடிநீர் திட்ட பணிகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பணி களை 45 நாட்களுக்குள் செய்து முடித்து குடிநீர் வழங்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.