Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

2010& 2011ம் ஆண்டு குடிநீர் திட்டத்திற்கு ரூ.33.69 கோடி ஒதுக்கீடு பணிகள் தீவிரம்

Print PDF

தினகரன் 28.06.2010

2010& 2011ம் ஆண்டு குடிநீர் திட்டத்திற்கு ரூ.33.69 கோடி ஒதுக்கீடு பணிகள் தீவிரம்

அரியலூர், ஜூன் 28:அரியலூர் மாவட்டத்தில் குடிநீர் திட்டத்திற்காக ரூ.33.69 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. ஜூலை மாதத்திற்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும் என்று கலெக்டர் ஆபிரகாம் தெரிவித்தார்.

அரியலூர் கலெக்டர் ஆபிரகாம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 6 ஒன்றியங்களில் உள்ள 201 ஊராட்சிகளில் உள்ள 1,408 குடியிருப்புகளுக்கு தனித்தனி மின்விசை குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொள்ளிடம் கூட்டு குடியிருப்பு திட்டத்தின் மூலம் ஆண்டிமடம், தா.பழூர், அரியலூர் பகுதிகளில் 1,305 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. ஜெயங்கொண்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் 281 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் முடியும் நிலையில் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஜூலை 2010க்குள் குடிநீர் வழங்கும் திட்டம் முழுமை பெறும்.

2010&2011ம் ஆண்டு குடிநீர் திட்டத்திற்காக ரூ.33.69 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தனி மின் விசைத்திட்டத்திற்காக ரூ.4.40 கோடியில் 67 பணிகள் தேர்வு செய்யப்பட்டு 2 பணிகள் முடிந்துள்ளது. 65 பணிகள் நடந்து வருகிறது. ஊரணி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் ஒதுக்கப்பட்டு 6 பணிகள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. அரசு பள்ளிகளில் குடிநீர் திட்டத்திற்காக ரூ.9 லட்சம் ஒதுக்கப்பட்டு 2 பணிகள் தேர்வு செய்யப்பட்டு நடந்து வருகிறது.

தடுப்பணையின் குடிநீர் வழங்குவதற்காக ரூ.1.80 கோடி ஒதுக்கப்பட்டு 25 பணிகள் தேர்வு செய்யப்பட்டு நடந்து வருகிறது. ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் 281 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்திற்காக ரூ.26.61 கோடி ஒதுக்கப்பட்டு 95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. ஜூலை மாதத்திற்குள் திட்டம் நிறைவடைந்து குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கப்படும். இவ்வாறு கலெக்டர் ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.