Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விழுப்புரம் பாப்பான்குளத்தில் குடிநீர்தட்டுப்பாடைபோக்க நிரந்தரதீர்வுகாணப்படும் நகர்மன்ற தலைவர் உறுதி

Print PDF

தினகரன் 30.06.2010

விழுப்புரம் பாப்பான்குளத்தில் குடிநீர்தட்டுப்பாடைபோக்க நிரந்தரதீர்வுகாணப்படும் நகர்மன்ற தலைவர் உறுதி

விழுப்புரம், ஜூன் 30: விழுப்புரம் பாப்பான்குளம் பகுதியில் 500 குடும்பங்கள் வசிக்கிறது. இந்த பகுதிக்கு நகராட்சி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளாக குடிநீர் விநியோகம் செய்யும் அளவு படிப்படியாக குறைந்தது.

இதற்கிடையில் விழுப்புரம் & வேலூர் அகல ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கிய போது குடிநீர் குழாய் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலும் சேதமடைந்தது. ரயில் பாதையை கடந்து குடிநீர் குழாய் அமைப்பதில் சிக்கல் உள்ளது. ரயில்வே நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், நக ராட்சி நிர்வாகம் ஆகிய 3 நிர்வாகங்களும் ஒன்றாக இணைந்து முயற்சி மேற்கொண்டால்தான் ரயில் பாதையை கடந்து குடிநீர் குழாய் கொண்டு வரமுடியும் என்ற சூழல் நிலவுகிறது.

இப்பிரச்னை தொடர்ந்து நீடித்து வருவ தால் மாற்று ஏற்பாடாக டேங்கர் லாரி மூலம் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கி வந் தது.

விழுப்புரம் மேலவீதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணியால் டேங்கர் லாரியில் தண்ணீர் கொண்டு வருவது தடைப்பட்டது. குடிநீருக்காக ரயில் பாதையை கடந்து அரை கி.மீ., தூரம் சென்று தண்ணீர் பிடித்து வந்தனர். அந்த பகுதிக்கு சரியான பாதை வசதி இல்லை. அங்கன்வாடி மையமும் கிடையாது. அடிப்படை கல்விக்கும் ரயில் பாதையை கடந்து தான் குழந்தைகள் செல்ல வேண்டும்.

விழுப்புரம் பாப்பான்குளத்துக்கு குடிநீர் வசதி, பாதை வசதி, அங்கன்வாடி மையம் வேண்டும் என்று வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்துக்கு அப்பகுதி மக்கள் நேற்று காலை திரண்டனர். இதையறிந்து விழுப்புரம் நகர்மன்ற தலைவர் ஜனகராஜ், ஓவர்சியர் ஜெயபிரகாஷ்நாராயணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

டேங்கர் லாரி மூலம் குடிநீர் வழங்கப்படும் என்றும், ரயில்வே நிர்வாகத்துடன் பேசி நிரந்தரமாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகர் மன்ற ஜனகராஜ் கூறினார். மேலும் சர்வேயர் கனகராஜியை வரவழைத்து அங்கன்வாடி மையம் அமைப்பது குறித்து ஆலோசித்தார். அங்கன்வாடி மையம் விரைவில் அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.