Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நவாப் குளத்திற்கு மழை நீரை கொண்டு வர நடவடிக்கை தேவை

Print PDF

தினமலர் 20.07.2010

நவாப் குளத்திற்கு மழை நீரை கொண்டு வர நடவடிக்கை தேவை

செஞ்சி : செஞ்சி மாரியம்மன் கோவில் எதிரில் உள்ள நவாப் குளத் திற்கு மழை நீரை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செஞ்சி பேரூராட்சி அலுவல கம் எதிரில் பழமையான நவாப் குளம் உள்ளது. கிருஷ் ணகிரி கோட்டையின் அடிவாரத் தில் இருந்து குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு பழங்காலத்தில் வாய்க்கால் அமைத்திருந்தனர். இதன் வழியாக மழை நீர் குளத் திற்கு வந்து சேர்ந்தது. குறைந்த மழை பெய்தாலும் நீர் வரத்து அதிகம் இருக்கும். இத னால் குளத்தில் ஆண்டு முழுவ தும் தண்ணீர் நிரம்பியிருந்தது.

மலையில் இருந்து வரும் மழை நீர் என்பதால் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை சிறுகடம்பூர், பெரியகரம் பகுதி மக்கள் குளத்து நீரை குடிநீராக பயன்படுத்தினர். இடைப்பட்ட காலத்தில் நகர வளர்ச்சியின் காரணமாக மலையில் இருந்து மழை நீர் வரும் வாய்க்கால் சாக்கடை வாய்க்காலாக மாறியது. ஆனால் குளத்தில் தண்ணீர் இருந்தால் கிருஷ்ணாபுரம், பெரியகரம், சிறுகடம்பூர், செட்டிப்பாளையம் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் கிடைக்கும்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு புராதண நகர அபிவிருத்தி திட்டத் தின் கீழ் 5 லட்சம் ரூபாய் மதிப் பில் குளத்தின் கரைகளை புதுப் பித்து சுற்று சுவர் எழுப்பி, கிரில் அமைத்து, கேட் போட்டனர். கடந்த ஆண்டு குளத்தின் வடக்கு பகுதியில் பேரூராட்சிக்கு புதியதாக அலுவலகம் கட்ட துவங்கினர். இதற்கான அஸ்தி வாரம் தோண்டியதில் குளத் திற்கு தண்ணீர் வரும் வாய்க்கால் முழுவதுமாக தூர்ந்து போனது. இதன் பிறகு மழை நீர் குளத் திற்கு வராமல் மேல்களவாய் சாலை களில் வழிந்து சங்கராபரணி ஆற்றில் கலந்தது.

ஒரு புறம் மழை நீர் வீணானதுடன், மழை நீரால் மேல்களவாய் தார் சாலையும் மோசமான நிலைக்கு சென்றது. மலையில் இருந்து வரும் மழை நீர் வீணா வதை தடுக்கவும், குளத்து நீரை மீண்டும் நல்ல தண்ணீராக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என செஞ்சி பேரூராட்சி கவுன்சிலர் சையத் சாதுல்லா ஆரணி எம்.பி., கிருஷ் ணசாமிக்கு மனு கொடுத் துள்ளார். இந்த மனுவில், கிருஷ்ணகிரி மலையடிவாரத்தில் உள்ள குழாய் குளத்தின் உபரி நீரை குழாய்கள் புதைத்து நேரடியாக நவப்பு குளத்திற்கு கொண்டு வர நிதி ஒதுக்கி தருமாறு கேட்டுள்ளார்.இதன் படி குழாய் பதித்து நவாப்பு குளத்திற்கு தண்ணீர் கொண்டு வந்தால் மழை நீரால் நவாப் குளம் நல்ல தண்ணீர் குளமாக மாறும். இதற்கு எம்.பி.,கிருஷ்ணசாமி நிதி ஒதுக்குவதற்கு ஏதுவாக செஞ்சி பேரூராட்சியில் இருந்து இந்த திட்டத்திற்கான மதிப்பீட்டை தயார் செய்து எம்.பி., மற்றும் மாவட்ட கலெக்டருக்கு பரிந் துரை செய்தால் திட்டம் நிறைவேறும்.

Last Updated on Tuesday, 20 July 2010 06:06