Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

இரவில் கண் விழித்து காத்திருக்க வேண்டாம் குடிநீர் வினியோக நேரம் இணையதளத்தில் வெளியீடு

Print PDF

தினமலர் 21.07.2010

இரவில் கண் விழித்து காத்திருக்க வேண்டாம் குடிநீர் வினியோக நேரம் இணையதளத்தில் வெளியீடு

கோபி, ஜூலை 21: கோபி நகராட்சி குடிநீர் வினியோகம் குறித்த தகவலை இணையதளத்தில் இனி பார்த்துக் கொள்ளலாம்.

எந்தெந்த பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது என்ற தகவலையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளில் வரியினங்கள், தொழிற்சாலைகள், நகராட்சி செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும்

ஷ்ஷ்ஷ்.tஸீ ரீஷீஸ்.வீஸீ.@நீனீணீ என்ற இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாக ஆணையாளர் என்ற இணையதளத்தில் ஒவ்வொரு நகராட்சி குறித்தும் தனித்தனியாக விபரம் வெளியிடப்பட்டு வருகிறது.

கோபி நகராட்சி சம்பந்தப்பட்ட தகவல்களையும் பெறலாம். கடந்த 2 ஆண்டாக கோபி நகராட்சி யில் ரூ.4.65 கோடி மதிப்பில் நடந்து வந்த புதிய குடிநீர் திட்டப்பணி காரணமாக 30 வார்டுகளுக்கும் முறையாக குடிநீர் வினியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டு இருந்தது. இதனால் நகரில் அவ்வப்போது பொதுமக்க்ள சாலைமறியல், நகராட்சி அலுவலகம் முற்றுகை போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஒருசில வார்டுகளுக்கு மட்டுமே சீரான குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது என்ற புகாரும் எழுந்தது.

ஷ்ஷ்ஷ்.னீuஸீவீநீவீஜீணீறீவீtஹ்.tஸீ.ரீஷீஸ்.வீஸீ.@ரீஷீதீவீ என்ற இணைய தளத்தில் கோபி நகரில் வினியோகிக்கப்படும் குடிநீர் குறித்த தகவலை வெளியிட நகராட்சி அதிகாரிகள் முடிவு செய்து, 2 நாட்களுக்கு முன் வெளியிட்டனர்.

இந்த இணைய தளத்தில் முதல் பக்கத்திலேயே வலது புற மூலையில் நியூ வாட்டர் சப்ளை என்ற பகுதி உள்ளது அதை தேர்வு செய்யும்போது அதனுள்ளே கடந்த 3 மாதமாக நகரில் உள்ள பார்வதி நகர், அவுசிங்யூனிட், ஜோதிநகர், பார்க், சக்தி ரோடு ஆகிய 5 மேல்நிலைத் தொட்டிகளில் இருந்து வினியோகிக்கப்பட்ட குடிநீர் விபரம் கிடைக்கும்.

மேலும் அன்றைய தினமும் மறுநாளும் எந்தெந்த பகுதிக்கு குடிநீர் வினியோகிக்கப்படும் என்ற விபரமும் பகுதி வாரியாக தெரிந்து கொள்ளலாம். குடிநீர் வினியோகத்தை பொதுமக்களே கண்காணித்து கமிஷனரிடம் புகார் தெரிவிக்கவும் வசதியாக இந்த இணையதளம் இருக்கும். புதிய குடிநீர் திட்டம் முழுவிபரம். குடிநீரில் குளோரின் கலக்கும் விதம், அதன் அளவு போன்ற தகவல்களையும் அறிந்து கொள்ள முடிகிறது. சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் அந்த நாட்களில் எந்தெந்தப் பகுதிக்கு குடிநீர் வினியோகிக்கப்படும் என்ற தகவல் வெள்ளிக்கிழமையே இணைய தளத்தில் வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

இணைய தளத்தை பொதுமக்கள் பார்ப்பதன் மூலம் குடிநீர் வினியோக நேரத்தை தெரிந்து கொள்வதோடு மின்வெட்டு போன்ற காரணத்தால் வினியோகம் பாதிக்கப்பட்டு இருந்தால் அதையும் அறிந்து கொள்ளலாம். இதனால் குடிநீர் தொடர்பாக பிரச்னை ஏற்படுவது தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.

தற்போது பவானி ஆற்றில் இருந்து நாள் ஒன்றுக்கு 80 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்பட்டு அதில் 5 லட்சம் லிட்டர் இலக்கம்பட்டிக்கு கொடுத்துவிட்டு மீதமுள்ளதை கோபி நகர் பகுதியில் தடையின்றி வினியோகிக்கப்படுகிறது.

இது தவிர 9900 குடிநீர் இணைப்புகளில் புதியதாக வழங்கிய 3 ஆயிரம் இணைப்புக்கு வாட்டர் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. மீதி இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அனைத்து இணைப்புக்கும் மீட்டர் பொருத்திய பின்னர் பொதுமக்கள் அளவாக குடிநீரைப் பயன்படுத்தும் போது குடிநீரை சேமிக்க முடியும்என்றனர்.