Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் பிரச்னையை சமாளிக்க அடுக்குமாடி குடியிருப்புக்கு புதிய இணைப்பு நிறுத்தம்

Print PDF

தினமலர் 21.07.2010

குடிநீர் பிரச்னையை சமாளிக்க அடுக்குமாடி குடியிருப்புக்கு புதிய இணைப்பு நிறுத்தம்

பெங்களூர், ஜூலை 21: பெங¢களூரில் குடிநீர் பிரச்னை தீரும்வரை புதிதாக அமைக்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்களுக்கு குடிநீர் இணை ப்பு தரமுடியாது என்று நகர குடிநீர் வினியோகம் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரியத்திற்கான அமைச்சர் கட்டா சுப்பிரமணியநாயுடு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நேற்று கூறியதாவது:

நகர மற்றும் புறநகர் பகுதிகளில் 2000 கிலோமீட்டர் தூரத்திற்கு பழைய கழிவுநீர் குழாய்களை மாற்றி புதிய குழாய்களை அமைக்கும் பணிகள் அடுத்தவாரம் முதல் துவங்க உள்ளது. 2011ம் ஆண்டில் இப்பணிகள் முடிவடையும்.

கழிவுநீர் குழாயில் திடக்கழிவுகளை வீசக்கூடாது என்ற பொறுப்புணர்வு நகர மக்களிடம் இல்லை. இதனால்தான் பெரும்பாலும் சாக்கடைகளில் அடைப்பு ஏற்படுகிறது.

பெருமாநகராட்சி சார்பில் நகரின் 17 பகுதிகளில் கழிவு நீரை சுத்திகரிக்கும் மையங்கள் அமைத்து அதிலிருந்து 600 மில்லியன் லிட்டர் தண்ணீரை சுத்திகரித்து தொழிற்சாலைகளுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளோம்.

நகரில் குடிநீர் கசிவு, பாதாளசாக்கடை திறந¢து கிடப்பது, சரியாக வேலை செய்யாத அதிகாரிகளுக்கு எதிராக புகார் அளிப்பது உள்ளிட்டவை குறித்து தகவல் அளிக்க 24 மணிநேரம் செயல்படும் கால்சென்டர் ஒன்றை ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

போனில் வரும் புகார்களுக்கு 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூரில் தற்போது 104 குடிநீர் சர்வீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன.

இனிமேல் வார்டுக்கு ஒன்று என்ற கணக்குப்படி 198 சர்வீஸ் ஸ்டேஷன் அமைக்கப்படும். ஒவ்வொரு பேரவை தொகுதிக்கும் 1 பறக்கும் படை அமைக்கப்பட்டு குடிநீர் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்.

பெங்களூர் நகரபகுதிகளில் தற்போது குடிநீர் பிரச்னை நிலவுவதை ஒத்துக் கொள்கிறேன். இதற்கு தீர்வாக காவிரி 4வது ஸ்டேஜ், 2வது கட்ட குடிநீர் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

அப்பணிகளில¢ 35 சதவீதம் முடிவடைந்துவிட்டது. அடுத்தாண்டு நவம்பர் மாதத்திற்குள் முழுப் பணிகளும் முடிவிற்கு வரும். 2011 அல்லது 2012ம் ஆண்டுக்குள் குடிநீர் பிரச்னை பெங்களூரில் தீர்க்கப்பட்டுவிடும்.

குடிநீர் தேவை அதிகமாக உள்ளதால் நகரில் புதிதாக அமைக்கப்படும் வர்த்தக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தற்போது குடிநீர் இணைப்பு தருவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இத்தடை அடுத்த ஆண்டும் நீட்டிக்கும். 2011ம் ஆண்டு குடிநீர் சப்ளை மற்றும் தேவையை கணக்கிட்டு சாதாரண மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்வதற்கு போதிய நீர் இருப்பு உள்ளது கண்டறியப்பட்டால் மட்டுமே வணிக வளாகங¢கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குடிநீர் சப்ளை அளிக்க முடியும்.

நகரில் புதிதாக 2000 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன. அதில் 90 சதவீதம் கிணறுகளில் தண்ணீர் வந்துள்ளது. ஒவ்வொரு வார்டுக்கும் 4 போர்வெல¢களையாவது அமைக்க வேண்டும் என்பதே அரசின் குறிக்கோளாகும். இவ்வாறு அமைச் சர் தெரிவித்தார்.